மிகவும் பிரமாண்டமாக உருவாக இருக்கும் சந்திரமுகி-2.! சத்தமே இல்லாமல் சஸ்பென்ஸை உடைத்த லாரன்ஸ்.!

chandramuki 2
chandramuki 2

chandramukhi 2 : 2005 ஆம் ஆண்டு இயக்குனர் பி வாசு இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகிய திரைப்படம் சந்திரமுகி இந்த திரைப்படத்தில் ரஜினியுடன் இணைந்து வடிவேலு, பிரபு, ஜோதிகா, நயன்தாரா என பல நட்சத்திரங்கள் நடித்து இருந்தார்கள் இந்த திரைப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார்.

இந்த திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் பட்டி தொட்டியெங்கும் பிரபலமாகி அனைத்து ரசிகர்களிடமும் நல்ல வரவேற்ப்பை பெற்றது, இந்தநிலையில் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் ராகவா லாரன்ஸ்.

இதுகுறித்து ராகவா லாரன்ஸ் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள தாவது, என்னுடைய அடுத்த படம் சந்திரமுகி இரண்டாம் பாகம் நான் இந்த திரைப் படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிப்பதை அதிர்ஷ்டமாகக் கருதுகிறேன் என கூறியுள்ளார் அதுமட்டுமில்லாமல் மேலும் இந்த திரைப்படத்தை பி வாசு இயக்குவதாகவும் சன் பிக்சர் நிறுவனம் மிகவும் பிரமாண்டமாக தயாரிப்பதாகவும். கூறியுள்ளார்.

படத்தை சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்க இருக்கிறார் எனவும் இந்த திரைப் படத்தில் நடிப்பதற்காக நான் வாங்கிய முன் பணத்திலிருந்து மூன்று கோடியை கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக மக்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து வாடும் தினக் கூலி தொழிலாளர்களுக்கும் மற்றும் நடன இயக்குநர்கள் சங்கத்தினர் மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோருக்கு நிதியுதவியாக அளித்துள்ளார்.

இந்த நிலையில் விரைவில் இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர் நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் சந்திரமுகி 2 திரைப் படத்தில் ரஜினியுடன் இணைந்து ராகவா லாரன்ஸ் நடிப்பது உறுதியாகியுள்ளது நடிகைகள் மற்றும் நடிகர்கள் அறிவிப்பை விரைவில் வெளியிடவிருக்கிறார்கள் படக்குழு.