chandramukhi 2 : ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத் நடிப்பில் பி. வாசு இயக்கத்தில் பிரம்மாண்டமாக வெளியாகி உள்ள திரைப்படம் சந்திரமுகி 2. இந்த திரைப்படத்தின் கதை ராதிகாவின் குடும்பமே அடுத்தடுத்து பெரும் அடி விழுகிறது அதனால் குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபட்டால் அனைத்து பிரச்சினையும் நீங்கும் என குடும்ப சாமியார் கூறுகிறார் அதனால் அனைவரும் குலதெய்வ கோவிலுக்கு செல்ல இருக்கிறார்கள்.
ஆனால் இந்த குலதெய்வ கோவிலுக்கு ராதிகாவின் மகளின் இரண்டு குழந்தைகளும் வர வேண்டும் என சாமியார் கூற உடனே அவர்களையும் வர சொல்கிறார்கள் அவர்களுடன் அந்த குழந்தைக்கு கார்டியன் ஆக இருக்கும் ராகவா லாரன்ஸ் அவர்களும் வருகிறார். பிறகு அனைவரும் ஒரு பங்களாவில் தங்குகிறார்கள் அங்கு சந்திரமுகியை தெரிஞ்ச தெரியாமலோ தட்டி எழுப்புகிறார்கள் அதன் பிறகு நடக்கும் சம்பவமே சந்திரமுகி 2 திரைப்படத்தின் கதை.
இந்த திரைப்படத்தில் முதலில் வடிவேலுவை பற்றி பார்த்துவிடலாம் வடிவேலு காமெடி செய்வதாக நினைத்து ஏதோ செய்து கொண்டிருக்கிறார் திரையரங்கில் சிரிப்பு வரவில்லை சீரியஸான கதாபாத்திரத்தில் நடித்த வடிவேலுக்கு இனிமேல் காமெடி வராது என பலரும் கூறிய நிலையில் சந்திரமுகி 2 திரைப்படத்திலும் அவரின் காமெடி எடுபடவில்லை.
அதேபோல் சந்திரமுகி முதல் பாகத்தில் ரஜினி எந்த ஒரு ஸ்டைலும் காட்டாமல் அமைதியாக நடிப்பார் ஆனால் இந்த திரைப்படத்தில் வேட்டையனாக நடித்துள்ள ராகவா லாரன்ஸ் பழைய படங்களில் உள்ள அதே ஸ்டைலில் நடித்துள்ளதால் பெரிதாக எடுபடவில்லை.
படத்தில் எத்தனையோ நடிகர்களுக்கு சில கதாபாத்திரம் இருந்தாலும் ஆனால் சிருஷ்டி டாங்கே எதற்காக நடிக்க வைத்தார்கள் அவருக்கு பெரிதாக ஒரு கதாபாத்திரமும் கிடையாது அது மட்டும் இல்லாமல் சிருஷ்டி டாங்கே அடிக்கடி கிளாமரான புகைப்படத்தை வெளியிட்டு விட்டு திடீரென இதில் குடும்ப குத்துவிளக்காக நடித்துள்ளதை ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
ராகவா லாரன்ஸ் அவர்களுக்கு ஜோடியாக மகிமா நம்பியார் நடித்திருந்தார் அவருக்கு மொத்தமே நாலு காட்சிகள் மட்டுமே ஒன்று கோலம் போடும் காட்சி மற்றொன்று அரண்மனையை சுற்றி பார்க்கும் காட்சி லட்சுமிமேனனுக்கு பேய் வரும் காட்சி வடிவேலு காட்சி என நான்கு காட்சிகள் மட்டுமே இருக்கிறது பெரிதாக இந்த நான்கு காட்சிகளும் அவருக்கு எடுபடவில்லை.
சந்திரமுகி முதல் பாகத்தில் கோபால் என்ற கதாபாத்திரம் மிகவும் பிரபலம் ஆனால் இரண்டாவது பாகத்தில் கோபாலுகாதாபாத்திரம் வரும் ஆனால் அதன் பிறகு அவரை காட்ட மாட்டார்கள். ஏனென்றால் அவர் இறந்ததால் பிறகு அவரின் காட்சிகள் எடுக்கப்படாமல் போனதாக கூறுகிறார்கள்.
இந்த திரைப்படத்தில் எந்த ஒரு கேரக்டராக இருந்தாலும் அவர்களுக்கு சிறிய கதாபாத்திரம் இருந்தது ஆனால் சுரேஷ் சந்திராவுக்கு மட்டும் பெரிதாக கதாபாத்திரமோ கேரக்டரோ கிடையாது எதற்காக அவர் இந்த படத்தில் வைத்துள்ளார்கள் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
முதல் பாகத்தில் சந்திரமுகியாக மிரட்டிய ஜோதிகா இரண்டாவது பாகத்தில் நடித்திருந்தால் கூட அருமையாக இருந்திருக்கும் என பலரும் கூறுகிறார்கள் ஏனென்றால் கங்கனா ரனாவத் முகத்தில் எக்ஸ்பிரஷன் பார்க்க முடியவில்லை ஆனால் ஜோதிகா முகத்தில் கண்ணாலயே மிரட்டுவார் அந்த அளவு எக்ஸ்பிரஷன் இருக்கும் இப்படி சந்திரமுகி படத்தில் சின்ன சின்ன மைனஸ்கள் இருந்தாலும் ஃபேமிலி ஆடியன்ஸை வெகுவாக கவர்ந்து நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.