Raghava Lawrence: நடிகர் ராகவா லாரன்ஸ் திருவாரூர் வாஞ்சிநாத சுவாமி கோவிலில் சாமி தரிசனம் முடித்துவிட்டு பக்தர்களுடன் அமர்ந்து அன்னதானம் சாப்பிட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் சந்திரமுகி 2 திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றி நடைப்போட்டு வருகிறது.
ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, பிரபு போன்ற முன்னணி பிரபலங்கள் இணைந்து நடித்த சந்திரமுகி 2 திரைப்படம் கடந்த 2005ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வெற்றினை பெற்றது. இவ்வாறு 18 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சந்திரமுகி 2 திரைப்படத்தினை பி வாசி இயக்கியுள்ளார்.
இதில் ரஜினியின் வேட்டையன் கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ், ஜோதிகாவின் சந்திரமுகி கேரக்டரில் கங்கனா ரனாவத் நடித்துள்ளனர். ஆனால் இந்த படத்தில் நடித்திருப்பவர்கள் அனைத்து கேரக்டரும் சோதப்பி இருப்பதாக நெகட்டிவ் விமர்சனங்களை ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர் வடிவேலு செய்யும் காமெடி ஒன்னு கூட சிரிப்பை ஏற்படுத்தவில்லை என்றும் கூறி வருகிறார்கள்.
சந்திரமுகி 2 நேற்று திரையரங்குகளில் வெளியான நிலையில் முதல் நாளில் ரூபாய் 7.5 கோடி வரை வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. எனவே இனிமேல் மூன்று நாட்கள் தொடர்ந்து விடுமுறை என்பதால் வசூல் கூடும் என்பதில் சந்தேகம் இல்லை கலவை விமர்சனத்தை பெற்றாலும் நல்ல வசூலை பற்றி வருவதனால் படக்குழுவினர்கள் உற்சாகத்தில் இருந்து வருகின்றனர்.
சந்திரமுகி 2 படத்தின் வெற்றினை தொடர்ந்து ராகவா லாரன்ஸ் திருவாரூர் ஸ்ரீ வாஞ்சியம் பகுதியில் புகழ்பெற்ற ஸ்ரீ வாஞ்சிநாத சுவாமி மங்கலாம்பிகா சமேதா திருக்கோவில் உள்ளது. அந்த கோவிலுக்கு எமதர்மராஜா சுவாமிக்கும் அதுப்போன்ற சந்திரகுப்தர் சாமிக்கும் தனித் சன்னதி அமைந்துள்ளது என்பது சிறப்புடையதாக இருக்கிறது இவ்வாறு இந்த கோவிலுக்கு ராகவா லாரன்ஸ் சென்றுள்ளார். அங்கு பக்தர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டும் அனைவருடனும் இணைந்து அன்னதானமும் சாப்பிட்டுள்ளார்.