ரிலீசுக்கு முன்பே பல கோடி வியாபாரமான “சந்திரமுகி 2”..! டிஜிட்டல் ரைட்ஸை தட்டி தூக்கி நிறுவனம்

chandramukhi 2
chandramukhi 2

Chandramukhi 2 :  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2005ஆம் ஆண்டு வெளிவந்து பட்டையை கிளப்பிய திரைப்படம் சந்திரமுகி இந்த படத்தை பி வாசு இயக்கி இருந்தார் படத்தில் சூப்பர் ஸ்டாருடன் கைகோர்த்து நயன்தாரா, விஜயகுமார், நாசர், வடிவேலு, ஜோதிகா, பிரபு, மனோபாலா மற்றும் பல நட்சத்திர பட்டாளம் நடித்திருந்தது.

படம் முழுக்க முழுக்க அரண்மனையில் நடக்கும் மர்மமான விஷயத்தை படமாக காட்டியிருந்தது மேலும் படத்தில் காமெடிக்கும் பஞ்சமில்லை அதனால் சந்திரமுகி படம் வெளிவந்து அதிக நாட்கள் ஓடியதோடு மட்டுமல்லாமல் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து அசத்தியது இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து பார்ட் 2 படத்தை பலரும் எதிர்பார்த்தனர்.

குறிப்பாக பி வாசு உடனே கதை எழுதி ரஜினியிடம் கூறியிருக்கிறார் ஆனால் அவரோ நடிக்க முடியாது என்று தெளிவாக கூறியதை எடுத்து பல வருடங்களாக கிடப்பில் போடப்பட்டன  இதனால் சந்திரமுகி 2  உருவாகாது எனக் கூறப்பட்ட வந்த நிலையில் திடீரென ராகவா லாரன்ஸ் ஓகே சொன்னதை அடுத்து சந்திரமுகி பார்ட் 2 அதிரடியாக உருவாகியுள்ளது.

படத்தில் ராதிகா சரத்குமார், வடிவேலு, கங்கனா ரனாத், லட்சுமிமேனன் மற்றும் பலர் நடித்துள்ளனர் படத்தின் படபிடிப்பு அனைத்தும் முடிந்து பிரமோஷன் வேலைகள் படும் ஜோராக போய்க்கொண்டிருக்கிறது அண்மையில் படத்திலிருந்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்தது அதில்  ராகவா லாரன்ஸ் செம மாசாக இருந்தார்.

இந்த நிலையில் சந்திரமுகி 2 படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ் மற்றும் சேட்டிலைட் உரிமம் விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சந்திரமுகி 2 படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ் நெட் பிலிப்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது சாட்டிலைட் உரிமத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகப்பெரிய ஒரு தொகை கொடுத்து வாங்கி உள்ளதாக தகவல்கள் வெளி வருகின்றன.