Chandramukhi 2 Box Office: சந்திரமுகி 2 படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த படம் தான் சந்திரமுகி. இந்த படத்தில் ரஜினியுடன் ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேலு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
சந்திரமுகி படம் வெளியாகி கிட்டத்தட்ட 18 வருடங்களை கடந்திருக்கும் நிலையில் தற்போது இப்படத்தின் இரண்டாவது பாகம் வெளியாகி உள்ளது. முதல் பாகத்தை இயக்கிய பி வாசு தான் இரண்டாவது பாகத்தையும் இயக்கி உள்ளார். லைக்கா நிறுவனம் தயாரிக்க ராகவா லாரன்ஸ் வேட்டையன் கேரக்டரிலும், கங்கனா ரனாவத் சந்திரமுகி கேரக்டரிலும் நடித்திருந்தனர்.
மேலும் ராதிகா, வடிவேலு, சிருஷ்டி டாங்கே உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க முதல் பாகத்தை விட இரண்டாவது பாகம் மெஹா ஹிட்டு அடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அப்படி மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று சந்திரமுகி 2 படத்தினை பார்த்து விட்டு ரசிகர்கள் நெகட்டிவ் விமர்சனங்களை தந்து வருகிறார்கள்.
ஜோதிகா நடித்திருந்த சந்திரமுகி மற்றும் ரஜினிகாந்த் நடித்திருந்த வேட்டையன் இந்த இரண்டு கதாபாத்திரங்களும் மிகவும் பயங்கரமாக அமைந்தது. ஆனால் இரண்டாவது பக்கத்தில் இந்த இரண்டு கேரக்டர்களையும் பி. வாசு பயங்கரமாக சோதப்பியுள்ளார். இவ்வாறு நெகட்டிவ் விமர்சனங்களுக்கு மத்தியில் சந்திரமுகி 2 படத்தினை ட்ரோல் செய்து வருகின்றனர்.
தற்பொழுது சந்திரமுகி 2 படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது அதன்படி இந்திய அளவில் இப்பட முதல் நாளில் 7.5 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறதாம். தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 4.5 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாகவும் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவித்து இருக்கிறது. தொடர்ந்து இனிமேல் மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் மேலும் பாக்ஸ் ஆபீஸில் முன்னேற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.