தமிழ் சினிமா உலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் பி வாசு இவர் இதுவரை இயக்கிய பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றி படங்கள் தான். மேலும் இவர் படங்களில் வில்லனாகவும் குணசித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து பிரபலமடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து 2005 ஆம் ஆண்டு சந்திரமுகி என்னும் பேய் படத்தை எடுத்தார். இந்த படத்தில் ரஜினி, வடிவேலு, பிரபு, ஜோதிகா, நயன்தாரா, விஜயகுமார் என ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து முதல் பாகம் வெளிவந்து சூப்பர் ஹிட் அடித்தது. அதனை தொடர்ந்து இதன் இரண்டாவது பாகத்தை உருவாக்க வேண்டும் என பலரும் கேட்டுக் கொண்டனர்.
ஆனால் ரஜினிக்கு இதில் ஆர்வமில்லை இருந்தும் இயக்குனர் வாசு சந்திரமுகி படத்தின் இரண்டாவது பாகத்தை எடுத்தாக வேண்டும் என உறுதியோடு இருந்தார். ஒரு வழியாக கதையை உருவாக்கிக் கொண்டு ரஜினியிடம் போய் கூறியுள்ளார் ஆனால் நான் நடிக்க மாட்டேன் என அவர் ஒத்தக்காலில் நிற்க பின் நடிகர் ராகவா லாரன்ஸிடம் கதையை கூறி தற்போது கமிட் ஆக்கி உள்ளார்.
சந்திரமுகி இரண்டாவது பாகத்தை வாசு இயக்க ராகவா லாரன்ஸ் நடிக்க இருக்கிறார் மிக பிரம்மாண்ட பொருட்செலவில் லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் ராதிகா, லட்சுமிமேனன், வடிவேலு போன்றவர்களும் நடித்து வருகின்றனர்.
முதல் கட்ட சூட்டிங் முடிந்த நிலையில் இரண்டாவது கட்ட சூட்டிங் தொடங்கப்பட இருக்கிறது. இப்படி இருக்கின்ற நிலையில் ராதிகா, ராகவா லாரன்ஸ், வடிவேலு மூவரும் அமர்ந்திருக்கும் பொழுது ராதிகா வடிவேலு முகத்தில் ஒரு குத்து விட்ட வீடியோ தற்பொழுது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. இதோ நீங்களே பாருங்கள்.
First schedule wrap #Chandramukhi2 nothing but high energy with @offl_Lawrence #vadivelu on #Pvasu s sets @LycaProductions pic.twitter.com/NFk7DuKTyR
— Radikaa Sarathkumar (@realradikaa) August 9, 2022