சந்திரமுகி 2 : ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை சந்திரமுகி 2 மொத்தம் எவ்வளவு வசூல் தெரியுமா.?

chandramukhi 2 day 5 collection
chandramukhi 2 day 5 collection

Chandramukhi 2 : சந்திரமுகி  திரைப்படம் ரஜினி, ஜோதிகா, நயன்தாரா ஆகியோர் நடிப்பில் வெளியானது இந்த திரைப்படம் வெளியாகி 17 வருடங்களுக்குப் பிறகு இந்த திரைப்படத்தின் இரண்டாவது பாகம் தொடர்ச்சியாக எடுத்திருந்தார்கள். அதேபோல் இந்த திரைப்படத்தில் ரஜினிக்கு பதிலாக ராகவா லாரன்ஸ், ஜோதிகாவிற்கு பதிலாக சந்திரமுகியாக கங்கணா ரணாவத்  ஆகியோர்கள் நடித்திருந்தார்கள் அதுமட்டுமில்லாமல் வடிவேலு இந்த பாகத்திலும் நடித்திருந்தார்.

அதேபோல் சந்திரமுகி 2 வெளியான அதே நாளில் ஜெயம் ரவியின் இறைவன், சித்தார்த்தன் சித்தா ஆகிய திரைப்படங்களும் வெளியாகி உள்ளது ஆனால் சந்திரமுகி திரைப்படம் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது மற்ற இரண்டு திரைப்படங்களும் வசூலில் பெரிதாக வசூல் செய்யவில்லை என கூறப்படுகிறது இருந்தாலும் சந்திரமுகி 2 சந்திரமுகியாக நடித்த கங்கனா ரனாவத்  நடிப்பு சிறப்பாக இல்லை என பலரும் கூறி வருகிறார்கள்.

கங்கனா ரனாவத் பாலிவுட்லையே பலத்த அடி விழுந்து வரும் நிலையில் சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடித்ததால் அதிகமாக ட்ரோல் செய்து வருகிறார்கள் இந்த நிலையில் முதல் வாரத்தில் சந்திரமுகி 2 திரைப்படம் கல்லா கட்டியுள்ளது. அதேபோல் சந்திரமுகி படத்தில் பேய் என்ற பயமே யாருக்குமே தெரியவில்லை ஆனால் இதற்கு முன்பு வெளியாக்கிய சந்திரமுகி முதல் பாகம் அருந்ததி ஆகிய திரைப்படங்களை இப்பொழுது பார்த்தால் கூட ரசிகர்களுக்கு ஒரு விதமான பயம் வரும்.

அதுமட்டுமில்லாமல் முதல் பாகத்தில் வடிவேலுவின் காமெடி ரசிக்கும் படியாக அமைந்தது ஆனால் இந்த பாகத்தில் என்னய்யா காமெடி செய்ற என சலிர்ப்புதான்  தட்டியது திரையரங்கில் உட்கார்ந்து பலரையும் கலாய்த்து கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள். இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை மினாடி நபி பண்டிகையை டார்கெட் செய்து சந்திரமுகி 2வெளியானது.

வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு ,மற்றும் காந்தி ஜெயந்தி என தொடர் விடுமுறை வந்ததால் குழந்தைகளுடன் படத்தை கொண்டாடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது அதேபோல் திரையரங்கில் குழந்தைகளுடன் படத்தை கண்டார்கள் இந்தநிலையில் சந்திரமுகி திரைப்படம் ஒட்டு மொத்தமாக 30 முதல் 35 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. தயாரிப்பு நிறுவனம் இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் விட வில்லை.