சந்திரமுகி-2 : 3 நாட்களில் எத்தனை கோடி வசூல் தெரியுமா.? அதிகாரப்பூர்வமாக அறிவித்த கங்கனா ரனாவத்.?

Chandramukhi 2 day 3 collection
Chandramukhi 2 day 3 collection

Chandramukhi 2 :  சந்திரமுகி 2  செப்டம்பர் 28ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்கில் வெளியானது இந்த திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது அது மட்டும் இல்லாமல் வெளியான மூன்று நாட்களில் எவ்வளவு வசூல் ஆகியுள்ளது என படத்தில் நடித்த கங்கனா ரனாவத் அவர் தெரிவித்துள்ளார் கிட்டத்தட்ட மூன்று நாட்களில் 40 கோடி ரூபாய் உலகம் முழுவதும் வசூலித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

பி வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், மகிமா நம்பியார் வடிவேல், ராதிகா சரத்குமார், லட்சுமிமேனன், சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடிப்பில் நகைச்சுவை திகில் திரைப்படமாக வெளியானது இந்த திரைப்படத்திற்கு எம் கீரவாணி தான் இசையமைத்து இருந்தார் இந்த திரைப்படம் வெளியாகி முதல் நாளில் 7.5 கோடி வசூல் செய்ததாக கூறப்பட்டது அதுமட்டுமில்லாமல் இரண்டாவது நாளில் 4.5 கோடி ரூபாய் வசூல் மூன்றாவது நாளில் ஐந்து கோடி வசூலும் செய்திருந்ததாக கூறப்பட்டது.

சந்திரமுகி இரண்டாவது பாகம் இதற்கு முன்பு 2005 ஆம் ஆண்டு ரஜினி ஜோதிகா, நயன்தாரா, பிரபு ஆகியோர் நடிப்பில் வெளியாகிய சந்திரமுகி திரைப்படத்தின் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டிருந்தது. மேலும் சந்திரமுகி 2 திரைப்படம் குறித்து ரஜினிகாந்த் கடிதம் ஒன்றை படக்குழுவினருக்கு எழுதியிருந்தார். அதில் அவர் கூறியதாவது ராகவா லாரன்ஸ் படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்.

ஆனால் நெட்டிசன்கள் சந்திரமுகி 2 திரைப்படத்தின் முதல் பாகத்துடன் ஒப்பிட்டு முதல் பாகம் லெவலுக்கு இரண்டாவது பாகம் இல்லை எனவும் ஜோதிகாவை தவிர வேறு எந்த நடிகை சந்திரமுகி கதாபாத்திரத்தில் நடித்தாலும் பார்ப்பதற்கு முடியவில்லை எனவும் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். மேலும் பலர் சந்திரமுகி 2 திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கொடுத்தாலும் இன்னும் 50 சதவீத திரையரங்குகளில் சந்திரமுகி 2 வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

3 நாள் முடிவில் உலகம் முழுவதும் சந்திரமுகி திரைப்படம் 40 கோடி வசூல் செய்துள்ளதாக நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.