சந்திரமுகி 2 இரண்டாவது நாள் வசூல் எவ்வளவு தெரியுமா.! குஷியில் ராகவா லாரன்ஸ்.

chandramukhi 2 day 2 collection
chandramukhi 2 day 2 collection

Chandramukhi 2 collection : பி வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் கங்கனா ரனாவத் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் சந்திரமுகி 2 இந்த திரைப்படத்தின் இரண்டாவது நாள் வசூல் குறித்த தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது.

ரஜினி, நயன்தாரா, ஜோதிகா, பிரபு, வடிவேல் ஆகியோர் நடிப்பில் வெளியாகிய சந்திரமுகி முதல் பாகம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை
பெற்றதால் இந்த திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தை 17 வருடங்களுக்கு தற்பொழுது வெளியாகி உள்ளது.

சந்திரமுகி 2 படத்தையும் பி. வாசு தான் இயக்கியுள்ளார் மேலும் வேட்டையபுரம் அரண்மனை அதே சந்திரமுகி அதே வேட்டையன் ராஜா என இந்த பாகத்திலும் மிக முக்கிய பங்கை வகிக்கிறது முதல் பாகத்தில் சைக்காலஜி திரில்லர் பணியில் உருவாகிய இந்த
திரைப்படம் இரண்டாவது பாகத்தில் பேய் ஆத்மா தெய்வ சக்தி என கதை நகர்ந்தது.

ஆனாலும் நீண்ட வருடம் பிரேக் கொடுத்ததால் வடிவேலு காமெடி மட்டும் ஒர்க்அவுட் ஆகவில்லை ஆனால் ராகவா லாரன்ஸ் ரஜினியை
அப்படியே பின்பற்றி நடித்துள்ளார். சந்திரமுகியாக கங்கனா ரனாவத் அவர் மிரட்டி இருந்தார் அது மட்டும் இல்லாமல் லட்சுமிமேனனும்
தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

ராதிகாவின் குடும்பம் மிகப்பெரிய பிரச்சனையை சந்தித்து வருவதால் குலதெய்வத்தை வழிபாடு செய்தால் தான் பிரச்சனை தீரும் என
அனைவரும் வேட்டையபுரம் வந்து அரண்மனையில் தங்குகிறார்கள் அங்கு சந்திரமுகியை தெரிந்தோ தெரியாமலோ எழுப்பி விடுகிறார்கள்
அதன் பிறகு நடக்கும் அசம்பாவிதமே படத்தின் கதை.

சந்திரமுகி இரண்டாவது பாகத்தை ரசிகர்கள் பலரும் திரையரங்கில் பார்த்து வருகிறார்கள் இந்த நிலையில் முதல் நாளில் 7.5
கோடி ரூபாய் சந்திரமுகி இரண்டாவது பாகம் வசூல் செய்திருந்தது இரண்டாவது நாளில் 4.50 கோடி வசூலாகி உள்ளது ஆக மொத்தம் 12.75 கோடி இரண்டு நாளில் வசூல் செய்துள்ளது. திங்கட்கிழமை வரை தொடர் விடுமுறை என்பதால் இந்த வசூல் நிலவரம் அதிகரிக்கும் என
எதிர்பார்க்கப்படுகிறது.