பேய் வேட்டையாடும் சந்திரமுகி 2 வசூல் – நான்கு நாட்கள் முடிவில் அள்ளிய கோடிகள் எவ்வளவு தெரியுமா.?

Chandramukhi 2
Chandramukhi 2

Chandramukhi 2 : சந்திரமுகி முதல் பாகம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு பி வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவானது சந்திரமுகி 2.  கடந்த  செப்டம்பர் 28ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது. படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து லட்சுமி மேனன், ராதிகா சரத்குமார்..

வடிவேலு, மனோபாலா, ஸ்ருஷ்டி டாங்கே மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர்.  படத்தின் கதை என்னவென்றால்.. ராதிகா குடும்பம் அனைவரும் தனது குலதெய்வ கோயிலுக்கு சென்று சாமி வழிபாடு செய்ய வேண்டும் ஆனால் அங்கு தான் பிரச்சனையே ஆரம்பிக்கிறது.

அந்த குயிலுக்கு செல்ல விடாமல் சந்திரமுகி தடுக்கிறது அதை மீறி குடும்பத்தினர் சாமி கும்பிட்டார்களா என்பதுதான் கதை படத்தின் ஒவ்வொரு சீரும் காமெடி ஆக்சன் எமோஷனல் மற்றும் திரில்லர் கலந்த படமாக இருந்ததால் ரசிகர்களையும் தாண்டி படம் குடும்பத்தினர் மத்தியில் சென்றடைந்தது.

அதனால் சந்திரமுகி 2 படம் பல்வேறு திரையரங்குகளில் ஹவுஸ்புல் ஆகி ஓடிக்கொண்டிருக்கிறது சந்திரமுகி 2 வெற்றி நடை கண்டு வருவதால் வசூலிலும் எந்த குறையும் வைக்கவில்லை முதல் மூன்று நாட்களிலேயே 25 கோடி வசூல் செய்த நிலையில் அடுத்தடுத்த நாட்களிலும் வசூல் வேட்டை ஆடி வருகிறது.

சந்திரமுகி 2 படம் வெளியாகி நான்கு நாட்கள் ஆகிய உள்ள நிலையில் ஒட்டுமொத்தமாக உலக அளவில் 27 கோடிக்கு மேல் வசூல் செய்து உள்ளதாம். வருகின்ற நாட்களிலும் சந்திரமுகி  2 படத்தின் வசூல் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. பொறுத்து இருந்து பார்ப்போம் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்..