திரையுலகில் ஒரு படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து விட்டால் உடனே அதன் இரண்டாவது பாகத்தை எடுப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். அந்த வகையில் பாகுபலி 2, புஷ்பா 2 போன்ற வரிசையில் இணைந்துள்ளது தான் சந்திரமுகி 2. பி வாசு இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் சந்திரமுகி.
இந்த படம் முழுக்க முழுக்க திரில்லர் மட்டும் காமெடி கலந்த ஒரு படமாக இருந்தது. படத்தில் ரஜினியுடன் சேர்ந்த நயன்தாரா, ஜோதிகா, பிரபு, நாசர், வடிவேலு, விஜயகுமாரி என அனைவரும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் பின்னி பெடல் எடுத்திருந்தனர் படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி அசத்தியதோடு வசூலில் புதிய சாதனை படைத்தது.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகம் உருவாக ரசிகர்கள் அதிகம் ஆர்வம் காட்டினார். ஆனால் ரஜினியோ நடிக்க மறுத்துவிட்டார். பல வருடங்களுக்கு பிறகு சந்திரமுகி 2 கதையை உருவாக்கிய பி வாசு மீண்டும் ரஜினியுடன் கேட்டு இருக்கிறார் ஆனால் அவரோ முடியாது எனப் பிடிவாதமாக சொல்ல..
பிறகு அவருடைய சிஷ்யன் ராகவா லாரன்ஸ் உடன் கூட்டணி அமைத்து. சந்திரமுகி 2 படத்தை எடுத்து வருகிறார். ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து வடிவேலு, லட்சுமிமேனன், ஸ்ருஷ்டி மற்றும் பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் சந்திரமுகி 2 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த கங்கனா ரணாவத்தை கமிட் செய்துள்ளனர்.
படத்தில் அவரும் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் இவர் கெட்ட போட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவர்தான் சந்திரமுகியாக நடிக்கிறாரா எனக் கூறிய கமெண்ட் அடித்து வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள்.