வசூலை குவிக்க நாள் குறித்த சந்திரமுகி 2.. ரிலீஸ் எப்பொழுது தெரியுமா?

chandiramuki 2
chandiramuki 2

தமிழ் சினிமாவில் வெளியாகி மிகப்பெரிய வெற்றினை பெற்ற முக்கியமான படம் தான் சந்திரமுகி இந்த படம் மலையாளத்தில் மணிச்சித்ரதாழ் என்ற தலைப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை கண்ட நிலையில் இதனை பி வாசு தமிழில் சந்திரமுகி என்ற பெயரில் இயக்கினார்.

இந்த படத்தில் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு, நாசர், வினீத், விஜயகுமார், ஷீலா, கே ஆர் விஜயா, மாளவிகா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நிலையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கடந்த 2005ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட் பெற்றது.

எனவே இந்த படத்தின் 2வது பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்து வந்த நிலையில் சுமார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படம் உருவாகி வருகிறது. இந்நிலையில் ஜோதிகா நடித்த கேரக்டரில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் நடித்து வரும் நிலையில் இவர்களை தொடர்ந்த வடிவேலு, ராதிகா சரத்குமார், லட்சுமிமேனன், சிருஷ்டி டாங்கே, மகிமா நம்பியார் உள்ளிட்டவர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில் எந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று சமீபத்தில் நிறைவடைந்தது.

இந்நிலையில் இந்த படம் வருகின்ற விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாக இருப்பதாக புதிய போஸ்டர் உடன் அதிகாரபூர்வமான தகவல் வெளியாகி உள்ளது. மேலும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னட ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க எம் எம் கீரவாணி இசையமைத்துள்ளார்.