சமீபகாலமாக தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்களின் வரத்து அதிகரித்து வருகிறது. அதிலும் என்ன தான் வாரிசு நடிகராக இருந்தாலும் அவர்களுக்கு திறமை இருந்தால் மட்டுமே சினிமாவில் நிலைத்து நிற்க முடியும் இல்லை என்றால் ஒரு சில திரைப்படங்களில் நடித்து விட்டு காணாமல் போய் விடுவார்கள்.
அந்த வகையில் 2007ம் ஆண்டு வெளியாகிய சக்கரகட்டி என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சாந்தனு. இவர் வேறு யாரும் கிடையாது பாக்கியராஜ் மகன் தான் சாந்தனு பாக்கியராஜ். தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வந்தவர் தான் பாக்கியராஜ்.
சாந்தனு பாக்கியராஜ் 2015ஆம் ஆண்டு தொகுப்பாளினியாக வலம் வந்த கீர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு கீர்த்தி குடும்ப வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் இவர் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார் அதில் டான்ஸ் வீடியோ மற்றும் சில வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களிடம் பிரபலமாகி வருகிறார்.
சாந்தனு பாக்யராஜ் அவர்கள் தற்பொழுது ராவண கூட்டம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் இன்னும் ஒரு சில திரைப்படங்களில் கமிட்டாகியுள்ளார் சாந்தனு பாக்கியராஜ் இந்த நிலையில் சமீபகாலமாக நடிகர் மற்றும் நடிகைகள் பலரும் தங்களுடைய சிறுவயது புகைப்படம் அல்லது குடும்ப புகைப்படத்தை பதிவு செய்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில் நடிகை நடிகர் சாந்தனு பாக்கியராஜ் அவர்களும் தன்னுடைய குடும்பத்துடன் புகைப்படம் ஒன்றை எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.