அஜித் பாடலுக்கு நடுரோட்டில் நடனமாடிய சைத்ரா ரெட்டி – உற்சாகத்தில் துள்ளி குதிக்கும் AK ரசிகர்கள்.! வைரல் வீடியோ.

valimai
valimai

விஜய் டிவி தொலைக்காட்சியில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் அறிமுகமாகி பின் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் யாரடி நீ மோகினி என்ற சீரியலில் வில்லியாக நடித்து பிரபலமடைந்தவர் சைத்ரா ரெட்டி. சீரியல்களில் சிறப்பாக பயணித்துக் கொண்டிருந்த சைத்ரா ரெட்டி அப்பப்போ பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வார்.

இதனால் அவருக்கு  ரசிகர்கள் பட்டாளம் கிடுகிடுவென உயர தொடங்கியது. ஆள் பார்ப்பதற்கு அழகாகவும் தனது திறமையையும் காட்டுவதால் அவருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் முதன் முதலில் எடுத்த உடனேயே அஜித்துடன் கைகோர்க்கும் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் காட்சிகள் ரசிகர்களை கொண்டாட வைத்தது அந்த அளவுக்கு சிறப்பான காட்சிகளில் நடித்து அசத்தினார்.

சின்னத்திரை வெள்ளித்திரை என இரண்டிலும் சிறப்பாக பயணித்துக் கொண்டிருக்கும் சைத்ரா ரெட்டிக்கு நாளுக்குநாள் வரவேற்பு அதிகரித்து கொண்டு இருக்கிறது.  அதை அடுத்து ரசிகர்கள் பட்டாளமும் கிடுகிடுவென உயர்ந்தது இதனால் ரசிகர்களை தக்க வைத்துக் கொள்ள அவ்வப்போது நாம் எதிர்பார்க்காத புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

அதுபோல தற்போது  வலிமை படத்தில் இடம்பெற்றுள்ள நீங்க வேற மாதிரி பாடல் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது என்பது நாம் அறிந்த ஒன்று தான். அந்த பாடலுக்கு நடிகை சைத்ரா ரெட்டி ஆண் நண்பர் ஒருவருடன் இணைந்து செமையாக நடனம் ஆடி அசத்தி உள்ளார்.

இந்த வீடியோ அஜித் ரசிகர்களை கொண்டாட வைத்தது மேலும் அந்த வீடியோவை ரசிகர்கள் ட்ரெண்டிங்காக்கி வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய வீடியோவை..