விஷாலின் “மார்க் ஆண்டனி” படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல் இதோ

Mark Antony
Mark Antony

Mark Antony Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித், விஜய், ரஜினி, கமல், சூர்யா என அனைவரும் வருடத்திற்கு ஒரு வெற்றி படத்தை கொடுத்து ஓடிக்கொண்டிருக்கின்றனர் ஆனால் விஷால் வெற்றி படத்தை கொடுத்து பல வருடங்கள் ஆகிவிட்டது கடைசியாக இவர் நடிப்பில் வெளியான எனிமி, லத்தி சார்ஜ் போன்ற படங்களும் கலவையான விமர்சனத்தை பெற்ற சுமாராகவே ஓடியது.

இதிலிருந்து மீண்டு வர இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் உடன் கூட்டணி அமைத்து மார்க் ஆண்டனி என்ற படத்தில் நடித்துள்ளார் ஜிவி பிரகாஷ் இசையமைத்து உள்ளார். மினி ஸ்டுடியோ சார்பாக வினோத் தயாரித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது படம் வருகின்ற செப்டம்பர் 15 தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.

படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டிரைலர் போஸ்டர் போன்றவை வெளிவந்து மிரட்டியது. எஸ் ஜே சூர்யா, விஷால் போன்றவர்கள் பலவிதமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளது தெரியவந்துள்ளது மேலும் சில்க் ஸ்மிதா இந்த படத்தில் தோன்றுவது போல காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கிறது அதுதான் படத்தின் ஹைலைட் கூட இந்த நிலையில் மார்க் ஆண்டனி படத்தின் சென்சார் மற்றும்  ரன்னிங் டைம்..

குறித்து தகவல் வெளியாகியுள்ளது அதன்படி பார்க்கையில் மார்க் ஆண்டனி படத்தின் சென்சார் யு /ஏ சான்றிதழ் வாங்கியிருக்கிறது படத்தின் மொத்த ரன்னிங் டைம் 2 மணி நேரம் 31 நிமிடங்கள் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. மார்க் ஆண்டனி   படத்தில் எவ்வளவு ஆக்சன் இருக்கோ அதே அளவுக்கு காமெடி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mark antony
Mark antony

ஏனென்றால் ஆதிக் ரவிச்சந்திரன் இதற்கு முன்பு எடுத்த திரிஷா இல்லனா நயன்தாரா பஹிரா போன்ற படங்கள் அப்படித்தான் இருந்தது அந்த வரிசையில் இந்த படமும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது மொத்தத்தில் மார்க் ஆண்டனி படம் வெற்றி பெற வேண்டுமென ரசிகர்கள் வாழ்த்து உள்ளனர் .