சிகிச்சை செய்ய பணம் இன்றி தவிக்கும் பிரபலம்..! சமயம் பார்த்து விஸ்வாசத்தை காட்டிய நடிகர் தனுஷ்..!

dhanush
dhanush

தற்போது திரையுலகில் இருக்கும் பல்வேறு பிரபலங்களும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள் அந்த வகையில்  நடிகர் கமலஹாசன் கூட சமயம் அமெரிக்கா சென்றதன் காரணமாக அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனை தொடர்ந்து தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் மிக பிரபலமான நடன இயக்குனராக வலம் வருபவர் தான் சிவசங்கர் இவர் தற்போது கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இவ்வாறு இவருக்கும் மட்டுமின்றி இவருடைய மகன் மற்றும் மனைவி என அனைவருக்குமே இந்த தோற்று ஏற்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் கவலை கிடைத்திருப்பதாக சமூக வலைதள பக்கத்தில் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் அவருடைய இளைய மகன் அஜய் முரளி அவர்கள் சமூக வலைதளப் பக்கத்தில் தன்னுடைய தந்தையாருக்கு சிகிச்சை பெற பண உதவி செய்யுமாறு பலரிடமும் கேட்டு கொண்டார். இதனை தொடர்ந்து நடிகர் சோனு சூட் அவருக்கு உதவி செய்து இருந்தார்.

அந்த வகையில் தற்போது நடிகர் தனுஷ் சிவசங்கர் மருத்துவ உதவிக்காக நன்கொடை அளித்துள்ளார்.  இவர் தனுஷ் திருடா திருடி படத்தில் மன்மதராசா பாடலுக்கு நடனம் அமைத்து கொடுத்துள்ளார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

அதுமட்டுமில்லாமல் பல்வேறு முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் இவர் பணியாற்றியது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் பலரும் இவருக்கு உதவி செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.