விக்ரம் படத்தை பார்த்துவிட்டு விஜய் சேதுபதியை “கருப்பு கமல்” என்று சொன்ன பிரபலம்.! யார் அது தெரியுமா.?

vijay sethupathy
vijay sethupathy

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விக்ரம் இந்த படம் இன்று கோலாகலமாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது இந்த படத்தில் கமல் எப்படி ஆக்சன் சென்டிமென்ட் காட்சிகளில் மிரட்டுகிறாரோ அதேபோல இந்த படத்தில் சூர்யா, பகத் பாசில், விஜய் சேதுபதியின் நடிப்பு வேற லெவலில் இருந்து வந்துள்ளது.

குறிப்பாக விஜய் சேதுபதி ஹீரோ வில்லன் போன்ற இரண்டு கதாபாத்திரங்களையுமே அண்மை காலமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் ஹீரோவாக ரொமான்டிக் சென்டிமென்ட் காதல் போன்றவற்றில் பின்னி பெடல் எடுக்கிறார். வில்லனாக தனது நடிப்பை முற்றிலுமாக மாற்றி அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து வருகிறார்.

இது ரசிகர்களுக்கு ரொம்ப பிடித்து போய் உள்ளது. தொடர்ந்து வில்லத்தனத்தில் தனது நடிப்பை வெளிப்படுத்தி கொண்டே செல்கிறார் அதற்கு ஏற்றார்போல லோகேஷ் கனகராஜ் விஜய் சேதுபதிக்கு எந்த மாதிரியான கதாபாத்திரம் கொடுத்தாலும் அவர் பயங்கரமாக நடிப்பார் என்பதை தெரிந்து வைத்துக் கொண்டு தான் மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து விக்ரம் படத்திலும் அவருக்கு ஒரு செம்மையான ரோல் கொடுத்துள்ளார்.

விக்ரம் படத்தில் சந்தானம் என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி இந்த படத்தில் ஒரு போதைபொருள் விற்பனையாளராக மிரட்டியிருக்கிறார் படத்தை பார்த்த பலரும் கமலை எப்படி புகழ்ந்து பேசுகிறார்களோ  அதேபோல விஜய் சேதுபதியையும் பல மடங்கு புகழ்ந்து பேசி வருகின்றனர்.

இப்படி இருக்கின்ற நிலையில் பிரபல நடிகர் ஒருவர் விஜய் சேதுபதிக்கு பட்டம் கொடுத்துள்ளார் அதாவது ரசிகர்கள் அனைவரும் அவரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி என கூறி வந்த நிலையில் தற்போது ஒரு நடிகர் அவருக்கு கருப்பு கமல் என பட்டம் வைத்துள்ளது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.

அந்த பிரபலம் வேறு யாருமல்ல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரம் காமெடியனாக நடித்து வரும் கூல் சுரேஷ் விக்ரம் படத்தை பார்த்து விட்டு வெளியே வந்து விமர்சனம் கொடுத்தார் அப்போது பேசிய அவர் கமலின் நடிப்பு வேற லெவல் அதேபோல இந்த படத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பும் வேற லெவலில் இருந்தது. அப்போது விஜய் சேதுபதி ஒரு கருப்பு கமல் என அவர் சொல்லி அசத்தினார்.