Thalaivar 171 : தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகராக வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் 71 வயதிலும் தனது ஸ்டைல் மற்றும் நடிப்பு திறமை போன்றவற்றின் மூலம் கோடான கோடி ரசிகர்களை கவர்ந்து வைத்து ஓடி கொண்டு இருக்கிறார். ரஜினி நடிப்பில் கடைசியாக வெளியான ஜெயிலர் திரைப்படம் 600 கோடிக்கு மேல் வசூல் அள்ளி பெரிய வெற்றியை பதிவு செய்தது.
அதனைத் தொடர்ந்து லால் சலாம் திரைப்படத்தில் ஒரு கேமியோ ரோலில் நடித்துள்ளார் அதுவும் 20 நிமிடம் தான் வந்து போகிறாராம் அதனை தொடர்ந்து ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் தலைவர் 170 படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் இப்படி ஓடிக்கொண்டிருக்கும் ரஜினி அடுத்து வெற்றி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் கூட்டணி அமைத்து தலைவர் 171 படத்தில் நடிக்க இருக்கிறார்.
அந்த படத்தை மிக பிரம்மாண்ட பொருள் செலவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது அனிருத் இசையமைக்க உள்ளார். தலைவர் 171 படத்திற்கு பெரிய எதிர்பார்ப்புகள் இருந்து வருகின்ற நிலையில் படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் வருகின்ற மார்ச் மாதம் அல்லது ஏப்ரல் மாதம் ஆரம்பத்தில் தொடங்கும் என கூறப்படுகிறது.
சமீபத்திய பேட்டி ஒன்றில் லோகேஷ் கனகராஜ் ரஜினியிடம் எனக்கு பிடித்தது அவருடைய வில்லனிசம் தான் முடிந்த அளவுக்கு தலைவர் 171 -ல் கொண்டு வர பார்க்கிறேன் என கூறியிருந்தார் இந்த நிலையில் தலைவர் 171 குறித்து ஒரு தகவல் வெளியாகி உள்ளது. ரஜினிக்கு நிகராக ஒரு மாஸ் வில்லனை போட வேண்டும் என லோகேஷ் திட்டமிட்டு இருந்தாராம்.
பாக்கியலட்சுமி சீரியல் வில்லி மாலினியா இது.. மாடர்ன் லுக்கில் அசத்தும் புகைப்படங்கள்
அதன்படி விஜய் சேதுபதி போட்டால் சிறப்பாக இருக்கும் என நினைத்துள்ளார் ஆனால் விஜய் சேதுபதி நோ சொல்லிவிட்டார் என தகவல் வெளியாகி உள்ளது இதற்கு காரணம் பண பிரச்சனையா அல்லது இனிமேல் வில்லனாக நடிக்க மாட்டேன் என விஜய் சேதுபதி முடிவு எடுத்திருக்கிறாரா என்றும் தெரியவில்லை பொறுத்திருந்து பார்ப்போம்..