இளம் இயக்குனர்கள் தான் டாப் நடிகரின் படங்களை இயக்கிய அசத்துகின்றனர். அந்த வகையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தளபதி விஜய்யை வைத்து மாஸ்டர் என்ற ஒரு சூப்பர் டூப்பர் ஹிட் படத்தை கொடுத்தார். இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் விலை ஏற்றத்தை கண்டது.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது முதல் முறையாக உலகநாயகன் கமலஹாசனுடன் இணைந்து விக்ரம் என்ற திரைப்படத்தை எடுத்து வருகிறார். இந்த திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு வித்தியாசமான மற்றும் ஆக்ஷன் கலந்த திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தில் கமல் கண்தெரியாதது போல நடித்து வருவதாக தகவல்கள் கசிகின்றன.
மேலும் இந்த திரைப்படம் கமலுக்கு 232 ஆவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் தொடங்கியவுடனே படத்தின் டைட்டில் மற்றும் டீசர் ஆகியவற்றை வெளியிட்டது படக்குழு என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் கமலுடன் இணைந்து பகத் பாசில், விஜய் சேதுபதி போன்ற பல டாப் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.
லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்த ஒரு சில நடிகர்களையும், தொழில்நுட்பக் கலைஞர்களையும் விக்ரம் திரைப்படத்தில் நடிக்க வைத்துள்ளார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். அந்த வகையில் அனிருத்தையும் தற்பொழுது இந்த திரைப்படத்திற்கு இசையமைக்க வைத்துள்ளார்.
இந்த நிலையில் மாஸ்டர் திரைப் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்த நரேனும் இந்த திரைப்படத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் உலக நாயகன் கமலஹாசன் நடிகர் நரேனுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.