விஜய் டிவியின் ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வந்த பிரபலம் ஒருவர் தற்பொழுது விலகி ஜீ தமிழ் சீரியல்களில் நடிக்க தொடங்கியுள்ளார் அது குறித்த தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது. தற்பொழுது உள்ள சின்னத்திரை தொலைக்காட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு ஏராளமான சீரியல்களை அறிமுகப்படுத்தி வருகிறது.
அந்த வகையில் சீரியல் பல அறிமுகப்படுத்துவதில் நம்பர் ஒன் தொலைக்காட்சியாக இருந்து வருபது தான் விஜய் டிவி. இந்நிலையில் ராஜா ராணி சீரியல் முதல் பாகம் வெற்றி பெற்ற நிலையில் சமீப காலங்களாக இரண்டாவது பாகம் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் தன்னுடைய மனைவி போலீஸ் ஆக வேண்டும் என்ற கனவுடன் சரவணன் இருந்து வருகிறார்.
இந்த நேரத்தில் அவருடைய அம்மா அப்பாவும் இறந்து விட எதிர்பாராத விதமாக சரவணன் சந்தியா இருவருக்கும் திருமணம் நடைபெறுகிறது. எப்படியாவது சந்தியாவை போலீசாக வேண்டும் என சரவணன் பல முயற்சிகளை செய்கிறார் பிறகு தன்னுடைய குடும்பத்தினர்களின் ஆதரவுடன் சந்தியா தற்பொழுது போலீசாகி இருக்கிறார்.
போலீஸான சந்தியா பல குற்றங்களை கண்டுபிடித்து வரும் நிலையில் இந்த சீரியலில் மயில் கதாபாத்திரத்தில் நடித்து வந்த பிரபல நடிகை ஜீ தமிழ் புதிய சீரியலில் நடிக்க இருக்கிறார். ஆம், அதாவது மயில் கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் நடிகை நவ்யா சுஜி. இவர் இதற்கு முன்பு பல திரைப்படங்கள் மற்றும் சீரியலில் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவருக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் கதாநாயகியாக நடிப்பாரென எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜீ தமிழின் புதிய சீரியலிலும் சைடு கேரக்டரில் தான் நடிக்க இருக்கிறார். எனவே இதன் காரணமாக ராஜா ராணி சீரியலில் இருந்து விலக அதிக வாய்ப்பு இருக்கிறது.