சண்டைக் காட்சியில் சம்பவ இடத்திலே உயிரிழந்த பிரபலம்..! விடுதலை திரைப்படத்தால் வெற்றிமாறனுக்கு வந்த புதிய பிரச்சனை..!

viduthalai-vetri
viduthalai-vetri

தமிழ் சினிமாவில் தோல்வியை துளி கூட சந்திக்காத ஒரு இயக்குனர் என்றால் அவர் வெற்றிமாறன் தான் இவ்வாறு பிரபலமான நமது இயக்குனர் சமீபத்தில் விடுதலை என்ற திரைப்படத்தை இயக்கிய வருகிறார் இந்த திரைப்படத்தில் நடிகர் சூரி மற்றும் விஜய் சேதுபதி ஆகியவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வருகிறார்கள்.

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி வரும் இந்த திரைப்படத்தில் படபிடிப்பானது மிக நீண்ட நாட்களாக நடைபெற்று வருவது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் ஆனால் சமீபத்தில் சென்னையில் இந்த திரைப்படத்தின் சூட்டிங் நடைபெற்ற பொழுது மிகப்பெரிய ஒரு விபத்து ஏற்பட்டுள்ளது.

பொதுவாக வெற்றிமாறன் திரைப்படங்கள் அனைத்துமே திரில்லிங்கான திரைப்படம் ஆக தான் இருக்கும் அந்த வகையில் ஒவ்வொரு காட்சிகளும் ரியாலிட்டியாகவும் தத்துரூபமாகவும் இருக்க வேண்டும் என்ற காரணத்தினால் காட்சிகள் மிக கடுமையாக இருப்பது மட்டுமில்லாமல் உண்மையாக இருக்கும் அளவிற்கு எடுக்கப்படும்.

அந்த வகையில் விடுதலை திரைப்படம் ஆனது முழுக்க முழுக்க காட்டில் எடுக்கப்படும் திரைப்படம் என்பதன் காரணமாக கொஞ்சம் திரில்லராக தான் இந்த திரைப்படம் எடுக்க வேண்டிய ஆகையால் இந்த திரைப்படத்தில் சண்டை காட்சிகள் அனைத்தும் மிகப் பிரமாண்டமாக இருக்க வேண்டும் என்ற காரணத்தினால் மிகச்சிறந்த பயிற்சியாளர்களை வைத்து சண்டை காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் சமீபத்தில் சென்னை கேளம்பாக்கத்தில் ஷூட்டிங் நடைபெற்று வந்தது அப்பொழுது எதிர்பாராத விதமாக ஒரு விபத்து ஏற்பட்ட நிலையில் ரோப் கயிறு அறுந்து விழுந்ததன் காரணமாக சண்டை பயிற்சியாளர் சுரேஷ் அவர்கள் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு நடைபெற்ற இந்த சம்பவம் சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவியது மட்டும் இல்லாமல் சினிமா துறையில் மிகப்பெரிய அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது. மேலும் இந்த திரைப்படம் மிக விரைவில் வெளியாகும் என நினைத்த நிலையில் இந்த பிரச்சனை காரணமாக இந்த திரைப்படத்தின் வெளியீட்டில் தாமதம் ஏற்படலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.