மலையாள சினிமாவில் மிக பிரமாண்டமாக வெளியாகி ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த ஒரு திரைப்படம் என்றால் அது பிரேமம் திரைப்படம் தான் இந்த திரைப்படம் மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு என பல்வேறு மொழி ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து விட்டது என்று சொல்லலாம்.
அந்த வகையில் இந்த திரைப்படத்தின் மூலமாக பட்டி தொட்டி எங்கும் மிகவும் பிரபலமான ஒரு நடிகை என்றால் நடிகை சாய் பல்லவி தான் இவர் இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக பலரும் இவரை மலர் டீச்சர் என்று செல்லமாக அழைப்பது வழக்கமான செயல்தான்.
இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நமது நடிகை ஹிந்தி சினிமாவில் சமீபத்தில் வெளியான காஷ்மீர் பைல்ஸ் என்ற திரைப்படம் பற்றி மிக தைரியமாக பேசியுள்ளார். இவ்வாறு நமது நடிகை வெளியிட்ட பதிவிற்கு பலர் ஆதரவு தெரிவித்து வந்தாலும் ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் நடிகை சாய் பல்லவி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அந்த வகையில் ஹைதராபாத் சுல்தான் பஜார் காவல் நிலையத்தில் பிரபல அமைப்பைச் சேர்ந்த அகில் என்பவர் சாய்பல்லவி மீது நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டுமென புகார் கொடுத்துள்ளது தெரிய வந்துள்ளது.
இவ்வாறு நடிகை சாய் பல்லவி மீது இப்படி ஒரு குற்றச்சாட்டு ஏற்படுத்தியது பலருக்கும் வியக்கத்தக்க விஷயமாக அமைந்தது மட்டுமில்லாமல் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியில் உள்ளார்கள். அதுமட்டுமில்லாமல் ஒரு சிலரோ அவர் செய்தது தவறு கிடையாது என போராடி வருகிறார்கள்.