Celebrity watched in Leo Movie Theater: தளபதி விஜய்யின் லியோ படம் நேற்று வெளியான நிலையில் பல நடிகைகள் நேராக தியேட்டருக்கு சென்று படத்தை பார்த்துவிட்டு தங்களது அன்பை டிவிட்டர் மூலம் பகிர்ந்திருக்கும் நிலையில் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. நடிகை திரிஷா ரோகிணி தியேட்டரில் லியோ பார்த்த நிலையில் மற்ற முன்னணி நடிகைகள் வெற்றி திரையரங்குகளில் ரசிகர்களுடன் லியோ படத்தினை பார்த்திருப்பது ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
விடாமுயற்சி படத்தின் கலை இயக்குனர் மிலன் மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்ததால் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே அஜர்பைஜானிலிருந்து உடனடியாக கிளம்பிய திரிஷா ரோகிணி தியேட்டரில் லியோ படத்தினை பார்த்துள்ளார்.
லியோ படத்தில் இதையெல்லாம் கவனித்தீர்களா.? அடேங்கப்பா இத்தனை சர்ப்ரைஸா.! ஆனாலும் த்ரிஷா பின்னிடிங்க
அப்படி திரிஷா, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் அனிருத் உள்ளிட்ட படக் குழுவினர்கள் லியோ படம் பார்த்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. இவர்களை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் மற்றும் கல்யாணி மலையாள சினிமா மூலம் அறிமுகமாகிய தற்பொழுது தமிழ் சினிமாவில் கலக்கி வருகிறார்கள்.
அதன்படி கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் மூவரும் வெற்றி தியேட்டரில் லியோ படத்தினை ஒன்றாக பார்த்த புகைப்படம் வெளியாகியுள்ளது. நடிகை கீர்த்தி சுரேஷ் பல்வேறு பேட்டிகளில் விஜய்யின் தீவிர ரசிகை என்பதை தெரிவித்திருந்தார். அப்படி அந்த லிஸ்டில் தற்பொழுது கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி இணைந்து விட்டார்களா என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
மேலும் மாளவிகா மோகனன், வரலட்சுமி சரத்குமார் போன்ற பல நடிகைகள் லியோ பாடத்திற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து ட்வீட் போட்டுள்ளார்கள். இவர்களைத் தொடர்ந்து வெங்கட் பிரபு, நெல்சன், சாந்தனு உள்ளிட்டவர்களும் லியோ படத்தினை பாராட்டி ட்வீட் செய்துள்ளார்கள். இவ்வாறு கலவை விமர்சனத்தை பெற்றாலும் லியோ படம் முதல் நாளில் ரூபாய் 140 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
லியோவில் உங்களுக்கு பிடித்த காமெடி நடிகர் யார்.? வில்லன்களை பங்கமாக கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்