TRP யில் அடிச்சி தூக்க சீரியலில் காதல் சந்தியாவை இறக்கும் பிரபல தொலைக்காட்சி.!

santhiya
santhiya

தமிழ் திரை உலகில் ஆண்டுதோறும் பல இளம் நடிகைகள் உருவாகிக் கொண்டு தமிழ் சினிமாவில் வலம் வருகிறார்கள் அப்படி அவர்கள் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் பின்னாட்களில் காணாமல் போவது உண்டு என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

ஆனால் தமிழ் சினிமாவில் தமிழ் நாட்டையே திரும்பி பார்க்க வைத்த திரைப்படங்களில் நடித்த நடிகைகள் பலரும் பின்னாட்களில் சினிமாவில் இருந்து காணாமல் போவது பேரதிர்ச்சியை ஏற்படுத்துவது வழக்கம் அப்படி தமிழ் சினிமா உலகில் சிறப்பான கதையை தேர்ந்தெடுத்து நடித்தது பிரபலமடைந்தவர் தான் சந்தியா.

இவர் காதல் என்ற திரைப்படத்தில் பரத்துக்கு ஜோடியாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார். இதை தொடர்ந்து தமிழ் திரை உலகில் அவர் பல படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் அத்தகைய திரைப்படங்கள் இவருக்கு நல்லதொரு வரவேற்பை பெற்று கொடுக்காததாலும் இவர் தமிழ் திரையுலகை விட்டு காணாமல் போனார்.

மேலும் தற்பொழுது வருகின்ற ஒரு சில படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்கள் வந்தாலும் அதனை ஏற்று நடித்துக் கொண்டுதான் வருகிறார் இந்த நிலையில் தற்போது அவர் சீரியலில் பக்கம் திசை திரும்பியுளளார் இவர் கண்மணி என்ற சீரியலில் நடிக்க உள்ளார் இவர் தமிழ் திரை உலகில் காதல், டிஸ்யூம்,வல்லவன்போன்ற  திரைப்படத்தில் நடித்ததன் பிறகு அவருக்கு சொல்லும்படி வாய்ப்புகள் அமையாததால் தற்போது சீரியல் பக்கம் திசை திரிந்து உள்ளது.

பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது தமிழ் சினிமாவில் சிறப்பாக வந்த நடிகைக்கு தற்போது மார்க்கெட் இல்லாமல் இருந்தது பலருக்கும் கேள்விக்குறியாக இருந்து வருகிறது.