தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் ரஜினி,அஜித் தொடங்கி இளம் நடிகர்கள் வரை பலரையும் வைத்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் இயக்குனர் சுந்தர் சி. இயக்குனராக வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருந்தாலும் ஒரு கட்டத்தில் ஹீரோவாகவும் நடித்து தொடர்ந்து வெற்றியை கொடுத்தவர் சுந்தர் சி என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த அளவிற்கு எதார்த்தமான நடிப்பை காமெடியையும் வெளிப்படுத்தும் தன்மை அவரிடம் இருந்தது. இருப்பினும் சுந்தர் சி -க்கு பெரிதும் பிடித்தது எனவே இயக்குனராக பணியாற்றுவது தான். ஒரு கட்டத்தில் காமெடி படங்களை எடுத்து வந்த சுந்தரி திடீரென தன்னை முற்றிலுமாக மாற்றி கொண்டு சமீபகாலமாக பேய்ப் படங்களை எடுத்து வருகிறார்.
அந்த வகையில் அரண்மனை படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது காரணமாக அதன் அடுத்தடுத்த பாகங்களாக எடுத்து வருகிறார் தற்போது மூன்றாவது பாகத்தை எடுத்து முடித்துள்ளார் அண்மையில் இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இந்த படத்தில் ஆர்யா, ராசி கண்ணா, யோகிபாபு, மனோபாலா, விவேக் போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். இப்படம் முழுக்க முழுக்க காமெடி மற்றும் த்ரில்லர் கலந்த படமாக உருவாக்கி உள்ளது இந்த நிலையில் அரண்மனை 3 படத்தின் சாட்டிலைட் உரிமையை பிரபல தொலைக்காட்சியான கலைஞர் டிவியின் கைப்பற்றியுள்ளது.
சமீபகாலமாக சன் டிவி மற்றும் விஜய் டிவிதான் டாப் படங்களை கைப்பற்றி வந்த நிலையில் தற்போது கலைஞர் டிவி கைப்பற்றி உள்ளது மகிழ்ச்சியான ஒரு செய்தியாக பார்க்கப்படுகிறது.