சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த சீரியலில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த தொடரில் ஒரு கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வரும் தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, அண்ணன், தங்கை போன்ற ஒரு குடும்பத்தை மையமாக வைத்து எடுத்து வருகின்றனர்.
மேலும் இந்த குடும்பத்தில் குடும்பத்தலைவியாக பாக்கியலட்சுமி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுஜித்ரா. சமாளித்து வரும் பிரச்சனைகள் போன்றவை மக்களின் வாழ்க்கைக்கு மிக நெருக்கமாக அமைகின்றன அதனால் இந்த தொடர் மக்கள் பலரின் ஃபேவரட் சீரியல் ஆகும். மேலும் தமிழ் சீரியல்களிலே பாக்யலட்சுமி தொடர் டிஆர்பி யிலும் முன்னிலையில் வகைக்கும் ஒரு தொடராகும்.
தற்போது இந்த சீரியலில் பாக்யாவின் கணவர் கோபி அவரது காதலி ராதிகாவை திருமணம் செய்து கொள்வதற்காக வீட்டிலுள்ள மற்றவர்களை ஏமாற்றி வருகிறார் இந்த உண்மை துளி கூட தெரியாத பாக்யா தனது கணவரிடம் பாசமாக இருந்துவருகிறார். மேலும் கோபியை பற்றிய உண்மை கோபியின் அப்பா மற்றும் இளையமகன் எழில் இருவருக்கும் தெரியவந்துள்ள..
நிலையில் எழிலும் பலமுறை தன் அப்பாவிடம் இது போன்ற செயலை செய்யாதீர்கள் என கூறியுள்ளார் அதை அடுத்து அதிரடியாக கோபியின் அப்பா பாக்கியா மற்றும் கோபி இருக்கும் புகைப்படத்தை எடுத்துக் கொண்டு ராதிகாவிடம் இதை காண்பித்தால் எல்லா பிரச்சனையும் சரியாகிவிடும் என்ற நினைத்து சென்றார் ஆனால் அது நடைபெறவில்லை.
இந்த நிலையில் இந்த சீரியலில் பாக்கியலட்சுமியின் மகளாக இனிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நேஹாவின் அம்மாவிற்கு சமீபத்தில்தான் ஒரு பெண் குழந்தை பிறந்தது இதையடுத்து நேஹாவின் தங்கைக்கு முதல் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் எழிலும் கலந்து கொண்டுள்ளார் அந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வெளியாகி உள்ளது. இதோ அந்த புகைப்படம்.