விவாகரத்து விஷயத்தில் நடிகை சமந்தாவை பின்தொடரும் பிரபல நடிகை..! இங்கயும் பெயர் நீக்கமா..?

samantha-1
samantha-1

தமிழ் மொழி மட்டுமின்றி பல்வேறு மொழிகளிலும் கதாநாயகியாக வலம் வந்தவர் தான் நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் தமிழில் தளபதி விஜய் நடிப்பில் கூட ஒரு திரைப்படத்தில்  ஜோடியாக நடித்துள்ளார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகைக்கு ஹாலிவுட்டில் மிக பிஸியாக இருப்பது மட்டுமின்றி குவாண்டிகோ என்ற அமெரிக்கா டிவி சீரியலில் நடித்ததன் மூலமாக உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாகி விட்டார். அந்த வகையில் தன்னுடைய 38 வயதிலும் டாப் ஹீரோயினாக  வலம் வந்துகொண்டிருக்கிறார் என்று கூட சொல்லலாம்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை கடந்த 2000 ஆண்டு உலக அழகி என்ற பட்டத்தைப் பெற்றவர். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு தன்னை விட பத்து வயது  சிறிய இளையவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். என்னதான் திருமணம் செய்து கொண்டாலும் இன்று வரை இவருடைய சினிமாவில் மவுசு குறையவே இல்லை.

அதுமட்டுமில்லாமல் தன்னுடைய திருமணத்திற்கு பிறகும் அவர் கவர்ச்சி காட்டுவதில் கொஞ்சம் கூட பஞ்சம் வைக்காத அளவிற்கு நடித்து வருகிறார். மேலும் இவர் தன்னுடைய கணவனுடன் இணைந்து கவர்ச்சியான உடையில்  ரொமான்டிக் போட்டோ ஷூட் நடத்துவது வழக்கம் தான்.

இதன் காரணமாகவே 60 மில்லியன் நபர்கள் இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின் தொடர்ந்து வருகிறார்கள். இந்நிலையில்  பிரியங்கா சோப்ரா தன்னுடைய கணவனுடன் இணைந்து அமெரிக்காவில் ஒரு வீடு வாங்கினார்கள் அந்த வீட்டில்தான் அவர்களுடைய தீபாவளி கொண்டாட்டம் தற்போது கொண்டாடப்பட்டது.

இந்நிலையில் சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரியங்கா சோப்ரா தன்னுடைய கணவரின் பெயரை நீக்க உள்ளார் இவ்வாறு பெயர் நீக்கப்பட்டதை பார்த்த ரசிகர்கள் பலரும் ஆச்சரியத்தில் மூழ்கி விட்டார்கள் இதனால் இவர்கள் இருவருக்கும் விவாகரத்து ஆக போகிறதா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தார்கள்.

ஆனால் பிரியங்கா சோப்ரா மௌனம் காத்து  வருகிறார். இதே போலதான் சமந்தாவும் விவாகரத்துக்கு முன்பாக தன்னுடைய கணவரின் குடும்ப பெயரை நிக்கியதன் பின்பு இருவரும் விவாகரத்து செய்ய போகிறீர்களா என்று கேட்ட கேள்விக்கு மௌனம் காத்துக் கொண்டிருந்து பின்னர் இருவரும் விவாகரத்து பெற்று விட்டார்கள்.

இதனால் பிரியங்கா சோப்ராவும் விவாகரத்து செய்யப் போகிறாரா என ரசிகர்கள் குழம்பிக் கிடக்கிறார்கள்.