விஜய் பட வாய்ப்பை தொடர்ந்து நிராகரிக்கும் பிரபல நடிகை – உச்சக்கட்ட கோபத்தில் ரசிகர்கள்.!

vijay
vijay

தளபதி விஜய் முதல்முறையாக இளம் இயக்குனர் நெல்சன் திலீப் குமாருடன் கைகோர்த்து பீஸ்ட் எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த படம் பல்வேறு தடைகளை தாண்டி ஒரு வழியாக வருகின்ற ஏப்ரல் 13ம் தேதி வெளியாக இருக்கிறது அதற்கு முன்பாக மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்திழுக்க பல்வேறு அப்டேட்களை கொடுத்து வருகிறது.

இதுவரை வெளிவந்த அப்டேட்டுகள் ரசிகர்களை துள்ளல் ஆட்டம் போட வைத்த நிலையில் அடுத்ததாக பீஸ்ட் படத்தின் டிரைலரை எதிர்நோக்கி இருக்கின்றனர். இது இப்படி இருக்க மறுபக்கம் விஜய் தனது அடுத்தடுத்த திரைப்படத்துக்கான வேலைகளில் இறங்கியுள்ளார் அந்த வகையில் விஜய் தனது 66 வது திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் கால் தடம் பதிக்க இருக்கிறார்.

‘விஜயின் இந்தப் படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க உள்ளார் பிரம்மாண்ட பொருட்செலவில் தில் ராஜு என்பவர் எடுக்க இருக்கிறார் இந்த படத்தின் கதைக்கு ஏற்றவாறு நடிகர், நடிகைகளையும் விஜய்க்கு  ஜோடியையும் தேர்வு செய்து வருகிறது படக்குழு. அந்த வகையில் விஜய்க்கு ஜோடியாக முதலில் கீர்த்தி சுரேஷ் நடிப்பார் என தகவல்கள் வெளிவந்தது ஆனால் அது பொய்யான தகவல் என தெரியவந்துள்ளது.

விஜய்க்கு ஜோடியாக முதலில் ராஷ்மிகா மந்தனாவிடம் தான் பேசி உள்ளது படக்குழு. ஆனால் அவரோ பாலிவுட்டில் ரன்பீர் கபூருடன் இணைந்து  ஒரு புதிய படத்தில் நடிகை உள்ளதால் விஜயின் 66 வது திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை நிராகரித்துள்ளார்.

அதேபோல இதற்கு முன்பாக பீஸ்ட் படத்தில் முதலில் நடிக்கும் வாய்ப்பு ராஷ்மிகா மந்தனாவுக்கு தான் சென்றுள்ளது ஆனால் அப்போது மற்ற படங்களில் பிஸியாக இருந்த காரணத்தினால் விஜயுடன் நடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.