ஒரு சில திரைப்படத்தில் நடித்துவிட்டு சினிமாவில் இருந்து காணமல் போன பிரபலங்கள்.! Part-3

சினிமாவில் அதிகமான நடிகைகள் மற்றும் நடிகர்கள் இருந்து வருகிறார்கள் அதில் ஒரு சில நடிகைகள் ஒரு சில திரைப்படங்களில் நடித்து விட்டு பிறகு எந்த ஒரு திரைப்படங்களிலும் நடிக்காமல் சினிமாவை விட்டு விலகிய பிரபலங்களைப் பற்றி தற்போது நாம் பார்க்கே இருக்கிறோம்.

அழகிய அசுரா யோகி அழகிய அசுரா மற்றும் சிவி இந்த திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர் மறைந்த தேங்காய் சீனிவாசனின் பேரன் தான் இந்த யோகி. 2006 அழகிய அசுரா, 2007  சிவி இந்த இரண்டு படங்களில் மட்டும் நடித்து அதற்கு பிறகு இந்த ஒரு திரைப் படத்திலும் நடிக்கவில்லை, இவர் தற்போது என்ன செய்கிறார் எங்கு இருக்கிறார் என்ற எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை.

yoki
yoki

நடிகர் மகேஷ் அங்காடி தெரு படத்தின் மூலமாக நடித்து மிகவும் பிரபலம் அடைந்தார் அதுமட்டுமல்லாமல் இந்த படத்தில் இவருடன் இணைந்து நடித்த அஞ்சலி அவருக்கு நிறைய திரைப்படத்தில் வாய்ப்பு கிடைத்தது, அது மிகவும் பிரபலமான ஒரு நடிகையாகவும் இருந்து வருகிறார்கள். ஆனால் ஆக்டர் மகேஷ் இந்த படத்திற்கு பிறகு எந்த ஒரு வெற்றிப் படங்களிலும் அவர் நடிக்கவே இல்லை, ஆனால் இவருக்கு ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

கொஞ்சம் சிரித்து கொஞ்சம் கோபம், வேல்முருகன் போர்வெல்ஸ், இரவும் பகலும் வேணும், புத்தனின் சிரிப்பு, என் காதலி சீன் போடுறா, போன்ற ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். எந்த ஒரு திரைப்படமும் இவருக்கு சரியாக அமையவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

நடிகர் சத்யா இவர் பிரபல நடிகர் ஆர்யாவின் தம்பி தான் இவர். புத்தகம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு அமரகாவியம், எட்டுத்திக்கும் மதயானை, போன்ற சில திரைப்படங்களில் நடித்துள்ளார். எந்த ஒரு திரைப்படமும் இவருக்கு சரியாக கைகொடுக்கவில்லை. இவருடைய முதல் படம் என்னவென்றால்  காதல் டூ கல்யாணம் இந்தத் திரைப்படம் தான் ஆனால் இந்த திரைப்படம் சில காரணங்களால் இன்று வரையிலும் வெளிவராமல் இருக்கிறது.

ரவி கிருஷ்ணா 2004 ல் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான 7ஜி ரெயின்போ காலனி என்ற திரைப்படத்தின் மூலமாக மிகவும் பிரபலமானார், இந்த திரைப்படத்திற்கு பிறகு சுக்கிரன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார், அதன் பிறகு கேடி, நேற்று இன்று நாளை, காதல்னா சும்மா இல்லை, ஒரு சில திரைப்படங்களில் மட்டும் எடுத்துள்ளார்.

கடைசியாக ஆரணிய காண்டம் என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்துள்ளார். அதன் பிறகு எந்த ஒரு திரைப்படத்தில் நடிக்கவே இல்லை, சினிமாவை விட்டு விலகி விட்டார். அதுமட்டுமல்லாமல் இவர் ஒரு சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

ஜித்தன் ரமேஷ் ஜித்தன் என்ற திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமாகி திரைப்படங்களில் நடித்துள்ளார். அதன் பிறகு எந்த ஒரு திரைப்படமும் இவருக்கு கை கொடுக்காததால்  தமிழ் சினிமாவில் நிலைக்க முடியாது நடிகர்களில் ஒருவராக ஆகிவிட்டார். அதன் பிறகு ஒரு சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். கடந்த வருடம் உங்கள போடணும் சார் என்று அடல்ட் மூவியில் நடித்திருந்தார். இவர் தற்போது ஒரு தெலுங்கு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

jiththan ramesh
jiththan ramesh

விக்ரமாதித்யா நடிகர் விசில் என்ற திரைப்படத்தின் மூலமாக சின்னா வாழ்க்கை ஆரம்பித்தார் அதன் பிறகு சின்னா, பம்பரக் கண்ணாலே, தொலைபேசி, நண்பனின் காதலி, நெஞ்சத்தைக் கிள்ளாதே போன்ற ஆறு திரைப்படங்களில் மட்டும் நடித்து ஒரே ஒரு தெலுங்கு திரைப்படத்திலும் நடித்துள்ளார். 2008ல் வெளியான நெஞ்சத்தைக் கிள்ளாதே இந்த திரைப்படத்திற்கு பிறகு எந்த ஒரு திரைப்படத்திலும் எடுக்கவில்லை.