இந்த கதையை வச்சிக்கிட்டு சினிமா பக்கம் வராத.. லோகேஷை குத்திய திரைப்பிரபலங்கள்

lokesh

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து தன்னை மிகப்பெரிய அளவில் உயர்த்தி கொண்டார்.  இப்பொழுது கூட தளபதி விஜய் வைத்து “லியோ” என்னும் திரைப்படத்தை காஷ்மீரில் எடுத்து வருகிறார். இந்த திரைப்படம் மிகப்பெரிய போதைப்பொருள் மையமாக வைத்து உருவாக உள்ளதாம்..

படத்தில் விஜய் உடன் கைகோர்த்து சஞ்சய் தத், கௌதம் மேனன், மிஷ்கின், திரிஷா, பிரியா ஆனந்த், சந்திப் கிஷன் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர். இந்தத் திரைப்படம் லோக்கி யுனிவர்சலில் இணையம் என சொல்லப்படுகிறது. இப்படி அசுர வளர்ச்சியில் போய்க் கொண்டிருக்கும் லோகேஷ் கனகராஜ்.

ஆரம்ப காலகட்டத்தில் சந்தித்த இன்னல்கள் ஏராளம் அதைப்பற்றி விலாவாரியாக பார்ப்போம்.. லோகேஷ் கனகராஜ் யாரிடமும் இயக்குனராக பணியாற்றவில்லை தன்னை தானே கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்துக் கொண்டு முதலில் குறும்படங்களை இயக்கினார் பிறகு மாநகரம் படத்தின் கதையை எழுதிக் கொண்டு முதல் வாய்ப்பை தேடி அலைதார்..

பல தயாரிப்பாளர்களை சந்தித்து கதை சொன்னேன் கதை சொல்வதற்கு பல ஊர்களுக்கும் சென்றேன்.. இரண்டு மாதங்களில் 50 முறை கதை சொல்லி இருக்கிறேன் ஒரு சிலர் நன்றாக இல்லை என்பார்கள்.  ஒரு சிலர் உனக்கு எதுக்குப்பா சினிமா என சொல்லுவார்கள் போய் பேங்க் வேலையை பாரு என சொல்வார்கள் ஆனால் என் மீது எனக்கு நம்பிக்கை இருந்தது.

leo
leo

இதற்காக நான் யாரையும் குறை சொல்ல முடியாது நான் கூறிய கதையை அவர்களுக்கு பிடிக்கவில்லை அவ்வளவு தான் தயாரிப்பாளர் எஸ் ஆர் பி பிரபு என்னை நம்பினார் அப்படித்தான் எனது முதல் படம் வாய்ப்பு கிடைத்தது என தெரிவித்தார். இப்போ அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்.