தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வந்து கொண்டிருக்கும் நடிகர் சூர்யா அவர்கள் நடிப்பில் வெளியான சூரரை போற்று மற்றும் ஜெய் பீம் ஆகிய இரண்டு வெற்றி படங்களை கொடுத்துள்ளார் அது மட்டுமல்லாமல் கடந்த மாதம் லோகேஸ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் வந்து அனைவரையும் விரட்டி இருந்தார்.
அதன் பின்னர் இப்போது வணங்கான், வாடிவாசல் என்று இரண்டு படங்களில் நடித்து வருகிறார். நடிகர் சூர்யா கடந்த 2011 ஆம் ஆண்டு வரை அதாவது ஏழாம் அறிவு திரைப்படத்திற்கு முன் இவர் நடிக்கும் அனைத்து படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது அதாவது சில்லுனு ஒரு காதல், வாரணம் ஆயிரம், ஆதவன், சிங்கம், என அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் அடித்தது.
ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக சூர்யாவிற்கு சரிவர படங்கள் வெற்றி பெறாமல் இருந்து வருகிறது. சமீபத்தில் வெளியான படம் மற்றும் ஜெய் பீம் படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது இதனால் இயக்குனர் சங்கர் அவர்கள் சூர்யாவை வைத்து ஒரு பிரம்மாண்ட படத்தை இயக்கத் திட்டம் தீட்டினார். அந்த படத்திற்கு சங்கர் அவர்கள் ஆயிரம் கோடி பட்ஜெட்டில் உருவாக்க இருந்தார்.
இந்த படத்தை தயாரிக்க பிரபல பாலிவுட் தயாரிப்பாளரான கரன் ஜோகர் என்பவர் இந்த படத்தை தயாரிக்க இருந்தார். அது மட்டுமல்லாமல் பெரிய பட்ஜெட் படம் என்பதால் தயாரிப்பாளர் கரன் ஜோகர் சுத்திருப்பவர்களிடம் இதில் பணத்தை செலவழிக்கலாமா என்று கேட்டுள்ளார் அதற்கு சுற்றி இருப்பவர்களோ கடைசி பத்து ஆண்டுகளாக சூர்யா அவர்களின் படங்கள் ஹிட் அடிக்காததால் அவரை வைத்து படத்தை தயாரிக்க வேண்டாம் என்று கூறியிருக்கிறார்கள். இதைக் கேட்ட தயாரிப்பாளர் அந்த படத்தின் பிளானை டிராப் செய்துவிட்டார்.
தற்போது இந்த பட்ஜெட்டை வேறொரு படத்தில் செலவழித்து அதில் இந்திய ஸ்டார் நடிகரை வைத்து நடிக்க வைக்கப் போகிறார் என்ற செய்தி தற்போது வெளியாகி உள்ளது.