Vijayakanth : சினிமாவில் வெற்றி கண்ட பலரும் ஒரு கட்டத்திற்கு மேல் அரசியலில் ஜொலித்துள்ளனர் அப்படிப்பட்டவர்களில் யார் யார்.? டிசம்பரில் இறந்த அரசியல் பிரபலங்கள் யார் யார் என்பது குறித்து இங்கு விலாவாரியாக பார்ப்போம்..
மக்கள் திலகம் எம்ஜிஆர் நாடோடி மன்னன், படகோட்டி, இதயக்கனி, அடிமைப்பெண், உரிமைகுரல் என பல வெற்றி படங்களை கொடுத்து ஓடி கொண்டிருந்த இவர் திடீரென அதிமுக என்ற ஒரு கட்சியை தொடங்கி அதில் அதை சிறப்பாக உருவாக்கி முதலமைச்சராக அரியணை ஏறினார். எம்ஜிஆர் உடன் பல படங்களில் நடித்த செல்வி ஜெயலலிதா எம்ஜிஆரின் மறைவிற்குப் பிறகு அரசியலில் தீவிரமாக என்ட்ரி கொடுத்து அவரும் முதலமைச்சராக அரியணை ஏறி வெற்றி கண்டார்.
சென்னை விமான நிலையத்தில் விஜயகாந்த் குறித்து எமோஷனலாக பேசிய ரஜினி.. கண்கலங்கிய ரசிகர்கள்
திமுக கட்சியை தொடங்கி முதலமைச்சராகவும் அரியணை ஏறியவர் அண்ணா இவர் திரைத்துறையில் வேலைக்காரி நாடகம் சினிமாவாக வந்தது.அண்ணாவின் வழி வந்த கலைஞரும் சினிமா துறையை சேர்ந்தவர் அவர் கதை எழுதிய பராசக்தி. அந்த படம் பெரிய வெற்றியை பதிவு செய்தது. முதலமைச்சராக தமிழ்நாட்டை நீண்ட ஆட்சி செய்தார் என்ற பெருமையை அவர் தான் வைத்திருக்கிறார்.
இவர்களைத் தொடர்ந்து சினிமாவில் புகழ் பெற்ற விஜய்காந்த் அரசியலில் என்று கொடுத்து எம்எல்ஏவாக முதலில் அரியணை ஏறினார் அதன் பிறகு எதிர்க்கட்சி தலைவராக வலம் வந்தார். மத்தபடி நடிகர் திலகம் சிவாஜி அரசியலில் வெற்றி பெற முடியாமல் தோல்வியை தழுவினார் உலகநாயகன் கமலஹாசன் என்று புகழப்படும் கமலஹாசனும் தனி கட்சி தொடங்கி வெற்றி பெற போராடிக் கொண்டு இருக்கிறார்.
கலைஞர் டிவி வெளியிட்ட டாப் 10 லிஸ்ட்.. முதலிடத்தில் ஜேர் போட்டு உட்கார்ந்த சூர்யா
இப்படி சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்த சில பிரபலங்கள் டிசம்பர் மாதத்தில் இறந்துள்ளனர் அவர்கள் குறித்து விளாவாரியாக பார்ப்போம்.. முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் 1987 டிசம்பர் 24ஆம் தேதி காலமானார் அதேபோல் முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி காலமானார் தற்பொழுது கேப்டன் விஜயகாந்த் 2023 டிசம்பர் 28ஆம் தேதி மரணமடைந்துள்ளார்.