தமிழ் சினிமாவில் எப்படியாவது பிரபலமடைந்து விட வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டு எதையாவது செய்து வருவார்கள் நடிகர்கள் மற்றும் நடிகைகள். அதிலும் ஒரு சில நடிகர்கள் பிரபலமடைய வேண்டும் என்பதற்காக சிறுபிள்ளைத்தனமாக அற்பத்தனமான விஷயங்களையும் செய்வார்கள்.
அதேபோல் பல திரைப்படங்களில் இந்த காட்சியில் இந்த நடிகர் தான் நடித்தார் என பொய் சொல்லி பிரபல படுத்திக்கொண்டு புகழை தேடுவார்கள் அதன் பிறகு ஒரு சில வருடங்கள் கழித்து யாராவது ஒருவர் பேட்டியில் சொன்ன பிறகுதான் அவர்கள் செய்த அற்பத்தனமான செயல் தெரியவரும்.
அந்தவகையில் பல நடிகர்கள் இதுபோல் சில சிலரை தரமான வேலைகளை செய்துள்ளார்கள் அவர்களைக் கீழே காணலாம்.
பாபி சிம்ஹா – பாபி சிம்ஹா அக்னி தேவி திரைப்படத்தில் நடித்த பொழுது சில சில்லரைத்தனமான வேலைகளை செய்ததாக பலரும் குற்றம் சாட்டி வந்தார்கள். அதாவது அக்னி தேவி திரைப்படத்தில் மதுபாலாவின் கதாபாத்திரம் மிக முக்கிய கதாபாத்திரமாக அமைந்தது அதாவது வில்லியாக நடித்திருந்தார்.
பாபி சிம்ஹா கதாபாத்திரத்தை விட முக்கிய கதாபாத்திரமாக அமைந்ததால் அதனைப் புரிந்து கொண்ட பாபிசிம்ஹா முதலில் பிரச்சனைகளை செய்து பார்த்துள்ளார் அதன் பிறகு இந்த திரைப்படம் பாதியிலேயே கைவிடப்பட்டது இதனால் பாபிசிம்ஹா காட்சிகளை டுப் போட்டு லாங்க் ஷாட் எடுத்து கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மூலம் முடித்தார்கள். இதனைத் தெரிந்து கொண்ட பாபிசிம்ஹா கோர்ட் வரை சென்று ஒன்றும் நடக்கவில்லை.
வெங்கட் பிரபு – வெங்கட்பிரபு திரைப்படத்திற்கு மக்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் இந்த திரைப்படத்தில் அஜித் பைக் ஸ்டண்ட் காட்சியில் நடித்ததாக கூறப்பட்டது. ஆனால் உண்மையில் அஜித் அந்த பைக் ஸ்டண்ட் காட்சியில் நடிக்கவில்லையாம்.
இந்த தகவலை உண்மையாகவே ரேஸ் ஓட்டிய அபிஷேக் மற்றும் செந்தில் என்பவர்கள் பிரபல பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியிருந்தார்கள் அதன் பிறகுதான் தெரிந்தது படக்குழு இப்படி சில சில்லறைத்தனமான வேலைகளை செய்து உள்ளார்கள் என்பது.
7ஜி சிவா தல அஜித் அவர்கள் கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 5 கோடி கொடுத்ததாக பெரும் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் புலிகினார்கள். ஆனால் அஜித் கொடுத்ததோ 15 லட்சம் மட்டுமே எனத் தெரியவந்தது.
அப்படி இருக்கும் வகையில் அஜித்தை வைத்து அரசியல் செய்கிறார்கள் எனப் பலரும் குற்றச்சாட்டை வைத்தார்கள். இப்படி தவறான செய்திகளைக் கூறி பிரபலமடைய நினைத்து வருகிறார்கள் பல பிரபலங்கள்.