தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகைகளான திரிஷா,ராஷ்மிகா மந்தனா மற்றும் கிரிக்கெட் வீரர்களான சவுரவ் கங்குலி மற்றும் ரோஹித் இவர்களை தொடர்ந்து தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர் கார்த்திக் ஆகிய பலரும் ஒன்றிணைந்து ஒரே திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
அதாவது மெகா பிளாக்பஸ்டர் என்ற தலைப்புடன் வைக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் போஸ்டர் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.அதில் ராஷ்மிகா, திரிஷா ஆகிய இருவரும் தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த போஸ்டரை வெளியிட்டு இருந்தார்கள். அதனை தொடர்ந்து கிரிக்கெட் வீரர்கள் சவுரவ் கங்குலி மற்றும் ரோஹித் சர்மாவும் தங்களுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்தார்கள்.
இவ்வாறு நடிகர் கார்த்திக்கும் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் இந்த போஸ்டரை வெளியிட்டு இருந்த உள்ள நிலையில் இவர்கள் அனைவரும் இந்த படத்தின் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறதா இல்லை வேறு ஏதாவது விளம்பரமா எனத் தெரியாமல் ரசிகர்கள் பெரிதும் குழப்பத்தில் இருந்து வருகிறார்கள்.இருப்பினும் இந்த படத்தின் டிரைலர் செப்டம்பர் 4ஆம் தேதி அன்று வெளியாக இருப்பதாகவும் அந்த போஸ்டரில் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் அன்றைய தினம் இந்த படத்தில் யார் யார் நடிப்பார்கள் எனவும் தெரியவரும். மேலும் இவ்வாறு ஒரு முன்னணி நடிகை நடித்தாலே ரசிகர்கள் மத்தியில் அந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வரும் இப்படிப்பட்ட நிலையில் இந்த போஸ்டர் உண்மை என்றால் ஒரே படத்தில் இரண்டு முன்னணி நடிகைகள், ரசிகர்களுக்கு பிடித்த இரண்டு கிரிக்கெட் வீரர்கள் மேலும் முன்னணி நடிகர் கார்த்திக் என ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெறும்.எனவே தற்பொழுது இவர்கள் அனைவரும் ஒன்றிணைத்து நடப்பது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.