விவாகரத்திற்கு பிறகாக நடிகை சமந்தா வீட்டில் நடந்த கொண்டாட்டம்..! குவியும் வாழ்த்துகளுடன் வெளியான புகைப்படம்..!

samantha-002
samantha-002

தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் இந்தி என பல்வேறு மொழிகளில் கதாநாயகியாக வலம் வருவது மட்டுமில்லாமல் முன்னணி நடிகையாகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ் சினிமாவில் முதன் முதலாக சிந்துசமவெளி என்ற திரைப்படத்தின் மூலம் தான் கதாநாயகியாக அறிமுகமானார் இந்த திரைப்படம் அவருக்கு மாபெரும் வெற்றி கொடுத்ததன் காரணமாக எளிதில் தமிழ்சினிமாவில் அடுத்தடுத்த பட வாய்ப்புகளையும் பெற ஆரம்பித்துவிட்டார்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் விஜய் சூர்யா போன்ற பல்வேறு நடிகர்களின் திரை படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது மட்டுமில்லாமல் தற்போது தமிழ் சினிமாவில் மிகப் பெரிய நடிகையாக வளர்ந்து விட்டார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் இந்த திருமணம் சில  வருடங்களிலே விவாகரத்தில் வந்து முடிவடைந்துவிட்டது.

பொதுவாக நடிகைகள் திருமணம் நடந்தாலே திரைப்படங்களில் கவர்ச்சி காட்டுவதில் கவனம் செலுத்துவது மட்டும் இல்லாமல் திரை படத்தில் நடிப்பதையே குறைத்து விடுவார்கள் ஆனால் சமந்தா தன்னுடைய திருமணத்திற்கு பிறகு எல்லை மீறிய காட்சிகளில் நடிக்க ஆர்வம் காட்டினார் ஆனால் இதுவே அவருடைய வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி வைத்துவிட்டது.

இவ்வாறு விவாகரத்து ஆன சில நாட்களாக அமைதி காத்து வந்த சமந்தா சமீபத்தில் தன்னுடைய வீட்டில் வளர்க்கும் செல்ல நாய் குட்டிக்கு பிறந்தநாள் விழா கொண்டாடி உள்ளார். இவ்வாறு அந்த புகைப்படங்கள் சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.

samantha-001
samantha-001