தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடிகட்டிப் பறந்து வருபவர் நடிகர் சிம்பு. இவர் தற்பொழுது மாநாடு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்புகள் மிகவும் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாளை சிம்புவின் பிறந்தநாள் அன்று இப்படத்தின் டீசர் இணையதளத்தில் 02:34 மணிக்கு வெளியிடப்படும் என்று படக்குழுவினர்கள் அறிவித்திருந்தார்கள்.
இந்நிலையில் தமிழில் வெளிவந்த இமைக்கா நொடிகள் வில்லனாக நடித்திருந்த இயக்குனர் மற்றும் நடிகரான அனுராக் காஷ்யப் ஹிந்தியில் மாநாடு திரைப்படத்தின் டீசரை வெளியிடுவார் என்று கூறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மலையாளத்தில் இயக்குனர் மற்றம் நடிகர் பிருத்திவிராஜ் டீசரை வெளியிடுவார் என்று கூறப்பட்டது.
ஆனால் தமிழில் யார் டீசரை வெளியிடுவார்கள் என்று எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. ஆனால் ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக டீசர் காத்திருக்கிறார்கள்.