சினிமா உலகை பொறுத்தவரை ஒரு நடிகர் எல்லா கதாபாத்திரங்களிலும் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தினால் அவர் எப்பொழுதும் உச்சத்தில் இருப்பதோடு ரசிகர்கள் கொண்டாடுவார்கள் அதை சரியாக புரிந்து வைத்துக் கொண்டு தற்போது படங்களில் நடித்து வருபவர் தான் நடிகர் சூர்யா.
ஆரம்பத்தில் காதல் சம்பந்தப்பட்ட படங்களில் நடித்தாலும் போகப்போக ஆக்ஷன் மற்றும் த்ரில்லர் படங்களிலும் தனது நடிப்பை வெளிக் காட்டி மிரட்டினார். தற்போதைய காலகட்டத்தில் டாப் நடிகராக இருக்கும் பலரும் ஆக்சன் படங்களை விரும்புவார்கள் ஆனால் சூர்யா இதிலிருந்து மாறுபட்டு நடிப்பதால் அவருக்கான ரசிகர்கள் பட்டாளம் விரிவடைந்து கொண்டே இருக்கிறது.
தற்போது இவர் தனது 40வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். படக்குழு நேற்று சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் போஸ்டரை வெளியிட்டது. சூர்யா நடிக்கும் 40வது திரைப்படத்திற்கு படக்குழு “எதற்கும் துணிந்தவன்” என பெயர் வைத்துள்ளது.
இந்த படத்திற்காக வேற ஒரு லுக்கில் நடித்து வருகிறார். சூர்யா இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பும் வேற லெவலில் எகிறி உள்ளது இந்த நிலையில் இவரது சகோதரனான கார்த்தி அண்ணன் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று மாலை 6 மணிக்கு சூர்யாவின் மாஸ்ஷப் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
வீடியோவை தற்போது சூர்யா ரசிகர்கள் பார்த்து கொண்டாடுவதோடு மட்டுமல்லாமல் ஷேர் செய்தும் இணையதள பக்கத்தில் வைரலாக்கி வருகின்றனர்
இதோ அந்த வீடியோ.
Loved this tribute to the man who is my inspiration. #Suriya
Happy birthday pa!https://t.co/wL3kQUUt1S
— Actor Karthi (@Karthi_Offl) July 23, 2021