சினிமா உலகில் திறமை இருந்தும் உள்ளே நுழைய முடியாமல் சிக்கித் தவிக்கின்றனர் இருப்பினும் ஏதோ ஒரு சமயத்தில் ஒரு சில வாய்ப்புகள் கிடைக்கும் அதன் மூலம் மக்கள் மற்றும் ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைப்பார்கள்.
அந்த வகையில் நடிகர் சிபி வஞ்சகர் உலகம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தில் கல்லூரி மாணவனாக நடித்து அசத்தியிருப்பார். அதன் காரணமாக சிபி -க்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
அதை தக்க வைத்துக் கொள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு தனது திறமை நடிப்பு போன்றவற்றை வெளிபடுத்தி மக்கள் மற்றும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் பிக் பாஸ் வீட்டில் இவர் தொண்ணூற்று ஐந்து நாட்களை கடந்த நிலையில் இறுதி வரை பயணிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் திடீரென சிபி தனக்கு மனதளவில் பாதிக்கப்பட்டு உள்ளேன் என்னால் மீதி இருக்கின்ற நாட்களில் பொய்யாக நடிக்க விரும்பவில்லை பெட்டியில் இருக்கும் 12 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு நான் கிளம்புகிறேன் என போட்டியாளர்களுக்கும் சொல்லினார்.போட்டியாளர்கள் எவ்வளவு சொல்லியும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் 12 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு தனது வீட்டிற்கு புறப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சிபியை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். சிபி இப்படி செய்வது நல்ல விஷயம் தான் என கூறி ரசிகர்களும் மக்களும் அவருக்கு ஆறுதலாக இருக்கின்றனர் இந்த நிலையில் நடிகர் சிபி வாழ்ந்து வரும் வீட்டின் புகைப்படங்கள் சில இணைய தள பக்கத்தில் வைரலாகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள்.