draupadi

தல அஜித் சொன்னதுதான் திரௌபதி படத்திற்கு நடந்துள்ளது.! உண்மையை போட்டு உடைத்த இயக்குனர்!!

தமிழ்சினிமாவில் பல படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன அதுபோல வருகின்ற 28 ஆம் தேதி பல படங்கள் வர உள்ளன. குறிப்பாக நாம் ஒரு படத்தையே பார்க்க உள்ளோம் ஏனென்றால் இன்று மக்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உள்ள படம் திரௌபதி.

இப்படத்தை மோகன்ஜி அவர்கள் இயக்குகிறார். இதற்கு முன்பு பழைய வண்ணாரப்பேட்டை என்ற படத்தை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் ஹீரோவாக ரீச்செட் அவர்கள் நடிக்கிறார். படத்தின் கதை நாடக காதலை மையமாகக் கொண்டு உருவாகி உள்ளது. இப்படத்திற்கு  ஆதரவும் மற்றும் எதிர்ப்பும் எகிறியுள்ளது  என்றே சொல்ல வேண்டும். இப்படம் வரும் வெள்ளிக்கிழமை அன்று உலகளவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

மோகன்ஜி அவர்கள் அஜித் அவர்களைப் பற்றி வீடியோ ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் வெளியீட்டு உள்ளார்.

அது என்னவென்றால் நல்ல படத்திற்கு புரமோஷன் தேவையில்லை என்று அஜித் அவர்கள் இதற்கு முன்பு பலரிடம் கூறியிருந்தார். அதுபோல தற்போது நடந்துள்ளது என்று மோகன்ஜி கூறியுள்ளார். நாங்கள் திரௌபதி படத்திற்கு குறைந்த அளவிலேயே  ப்ரோமோஷன் செய்திருந்தோம். தற்போது அஜித் அவர்கள் சொன்னதுபோலவே நடந்து உள்ளதால் தனக்கு மகிழ்ச்சியாக உள்ளது எனவும் மேலும் இப்படம் மக்கள் மத்தியில் தற்போது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.இதனை பார்த்த அஜித் ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர்.

dulqur shalman

நீச்சல் குளத்தில் அழகிகளுடன் குத்தாட்டம் போட்ட துல்கர் சல்மான்.!வைரலாகும் வீடியோ!!

மலையாள திரைப்படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர் துல்கர் சல்மான். இவரது தந்தை மலையாள சினிமா துறையில் உச்சத்தில் இருப்பவர்தான் நடிகர் மம்முட்டி. தற்போது இவர்கள் சினிமா துறையில் அப்பாவும் மகனும் காலூன்றி வருகிறார்கள். துல்கர் சல்மான் 2012ஆம் ஆண்டு செகண்ட் ஷோ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து அவர் பல வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளார் அதிலும் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் வாயை மூடி பேசவும், ஓ காதல் கண்மணி போன்ற படங்களாகும்.

இந்த நிலையில் தற்போது துல்கர் சல்மான் நடித்து வரும் படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இப்படத்தில் ஹீரோயினாக ரிது வர்மா நடிக்க உள்ளார் மற்றும் தமிழ் திரை உலகில் பல வெற்றி படங்களை கொடுத்த இயக்குனரும் நடிகரும் ஆகிய கௌதம் வாசுதேவ் மேனன் அவர்கள் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதுமட்டுமில்லாமல் விஜய் டிவி தொகுப்பாளர் ரக்சன், நிரஞ்சனி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். திரைப் படத்தை அறிமுக இயக்குனர் தேசிங்கு பெரியசாமி அவர்கள் இயக்கி வருகிறார்.

இந்த நிலையில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் பாடல் மேக்கிங் வீடியோ இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. படத்தின் காட்சிகள் மிக கலர்புல்லாக எடுக்கப்பட்டு வருகிறது. இப்படத்தின் பாடல் நீச்சல் குளத்தில் அழகிய பெண்களுடன் துல்கர் சல்மான் மற்றும் ரக்சன் இருவரும் கொண்டாட்டத்தில் அதுபோன்ற காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. அவரது ரசிகர்கள் இணையதளத்தில் அந்த வீடியோவை பார்த்து வருகின்றனர். இப்படம் வருகின்ற 28 ஆம் தேதி வெளியாகும் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.