தமிழ் சினிமாவில் காமெடியனாக அறிமுகமாகி பின்னர் ஹீரோவாக விஸ்வரூபம் எடுத்துள்ள அவர் நடிகர் சந்தானம் ஆரம்பத்தில் காமெடி படங்களை கொடுத்து வந்த இவர் தற்போது ஆக்சன் திரைப்படங்களிலேயே பெரிதும் விரும்புகிறார் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்து அசத்தியுள்ளது.
சந்தானம் நடிப்பில் தற்போது கூட “சபாபதி” என்ற திரைப்படம் உருவாகி உள்ளது. படம் வருகின்ற 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. படத்தின் டிரைலர் வெளியாகி அனைவரையும் கவர்ந்த நிலையில் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து உள்ளது.
இந்த நிலையில் வடபழனியில் உள்ள கமலா திரையரங்கில் படக்குழு கலந்துகொண்டு செய்தியாளர்களை சந்தித்து. சபாபதி படம் குறித்தும் மற்ற படங்களில் குறித்தும் இதில் பேசியிருந்தார் நடிகர் சந்தானம். அப்பொழுது அவர் ஜெய் பீம் திரைப்படம் மட்டுமல்ல..
எந்த ஒரு திரைப்படம் உயர்த்தி பேசலாம் ஆனால் யாரையும் தாழ்த்திப் பேசக் கூடாது துன்புறுத்தக் கூடாது என கூறி உள்ளார். ஜாதி,மதங்களை கடந்து தான் ரசிகர்கள் படத்தை திரையரங்குக்கு வந்து பார்க்கின்றனர். இப்படி இருக்கின்ற நிலையில் சாதி குறித்த சர்ச்சை பேச்சுகள் தேவையற்றது என கூறி உள்ளார்.
செய்தியாளர்களும் பல்வேறு விதமான கேள்விகள் கேட்கப்பட்டது அப்போது செய்தியாளர்கள் westandwithsurya என்ற # குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு நடிகர் சந்தானம் எனக்கு இது குறித்து எதுவும் தெரியாது என கூறினார். சந்தானம் இது குறித்து பேசிய செய்தி தற்போது இணைய தள பக்கத்தில் தீயாய் பரவி வருகிறது.