Meena : 90களில் ரசிகர்களின் கனவு கன்னியாக வந்தவர் கண்ணழகி மீனா.. முதலில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர் ஒரு புதிய கீதை படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார் அதன் பிறகு இவர் ரஜினி, கமல், அர்ஜுன், சரத்குமார், அஜித் என டாப் ஹீரோக்களுடன் நடித்து தனக்கென ஒரு மார்க்கெட்டை பிடித்துக் கொண்டார். இப்படி ஓடிக்கொண்டிருந்த மீனா.
தொழிலதிபர் வித்தியாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவர்கள் இருவருக்கும் நைனிகா என்ற மகள் பிறந்தார் அவரும் குழந்தை நட்சத்திரமாக தொடர்ந்து நடித்து வருகிறார். வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்து வந்த இந்த குடும்பத்திற்கு பிரச்சனை ஆரம்பித்தது. மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல் நலப் குறைவு காரணமாக இயற்கை எழுதினார்.
நீ அதுக்கு சரிப்பட்டு வரமாட்ட.. ஆசையா கேட்ட மைக் மோகனுக்கு அவ்வா கொடுத்த இயக்குனர் ஆர் சுந்தர்ராஜன்
அதன் பிறகு இரண்டு, மூன்று மாதங்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்தார். மீனாவை அவருடைய நண்பர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே கொண்டு வந்தனர் தற்பொழுது மீண்டும் சினிமாவில் நடிக்க ரெடியாக இருக்கிறார் இந்த நிலையில் இயக்குனரும் நடிகருமான கே எஸ் ரவிக்குமார் மீனா பற்றி பேசிய உள்ளார் அவர் சொன்னது என்னவென்றால்..
மீனாவுக்கு பவுன்சர் கிடையாது ஆனால் அவருக்கு பாதுகாப்பாக இருந்தவர் அவருடைய அம்மா தான் அவரை அம்மாவை தாண்டி மீனாவை பார்ப்பது ஒன்னும் சாதாரண விஷயம் இல்ல.. மீனாவின் எதிர்காலத்தில் பற்றி அதிகமாக யோசித்தார். நான் அஜித்தை வைத்து வில்லன் படத்தை எடுத்திருந்தேன்.
இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க மீனா ரொம்ப ஆசைப்பட்டார் பிறகு எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் சரி நான் நடிக்கிறேன் என கூறினார். வில்லன் படத்தில் அஜித்தையும், மீனாவையும் சேர்த்து வைப்பது போல் முதலில் காட்சி இல்லை. கடைசியில் இரண்டு மூன்று சீன் காட்சிகளில் மீனாவை அஜித்துடன் சேர்த்து வைப்பது போல காட்சிகள் உருவாக்கப்பட்டது என கூறினார்.