சிம்பு பட நடிகையை விடாமல் துரத்தும் வழக்கு..! அதிர்ச்சியில் தெலுங்கு திரையுலகம்..!

simbu-charmi

தமிழ்மொழி மட்டுமின்றி இந்தி தெலுங்கு போன்ற பல்வேறு மொழிகளிலும் சிறந்த நடிகையாக வளம் வருபவர் தான் நடிகை சார்மி கவுர். இவ்வாறு பிரபலமான நமது நடிகையின் மீது தற்போது போதைபொருள் குற்றச்சாட்டு ஏற்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் தற்போது திரை உலகில் இருக்கும் பல்வேறு பிரபலங்களும் போதை பொருட்களை அதிகளவு பயன்படுத்துவதாக ஒரு அதிர்ச்சியான தகவல் வெளியாகி கொண்டிருக்கிறது. இந்நிலையில் இது குறித்து அமலாக்கப்பிரிவு தெலுங்கு திரையுலக பிரபலங்களிடம் விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில் இதனைத் தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகநாத் அவர்கள் விசாரணையில் ஆஜராகியுள்ளார். என தொடர்ந்து அவரிடம் சுமார் 10 மணிநேரம் அளவிற்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதன் விளைவாக தற்போது 12 தெலுங்கு சினிமா பிரபலங்கள் மீது அமலாக்கத் துறை விசாரணை நடத்த உள்ளார்கள்.

அதுமட்டுமில்லாமல் இந்த விசாரணையில் ஈடுபடுபவர்கள்  அனைவரிடமும் வங்கி பரிவர்த்தனை முழுவிவரத்தையும் சேகரிக்கப்பட்டு வருகிறது இதனைத் தொடர்ந்து  தற்போது இந்த விசாரணையில் நடிகை சார்மியும் ஆஜராக உள்ளார்.

ஏற்கனவே நடிகை சார்மி 4 வருடங்களுக்கு முன்பாக இதே போன்ற வழக்கில்  அவர் மீது விசாரணை தொடரப்பட்டது. பின்னர் காவல்துறை அதிகாரி ஒருவர் தன் மீது தவறுதலாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டி பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தி விட்டார்.

இதன் காரணமாக தற்போது சர்மி அவர்கள் பெண் போலீஸ் காரர்கள் கட்டுபாட்டில்  வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது இவ்வாறு  நடந்த அந்த செயலின் காரணமாக தெலுங்கு திரையுலகமே பரபரப்பாக இருந்து வருகிறது.

nikki galrani-1
nikki galrani-1