மதுபானம் கிடைக்காததாள் இளைஞர்களுக்கு ஊரடங்கு ஸ்பெஷல் கேரட் பீர் தயாரித்து விற்பனை செய்து வந்தவரை சென்னை போலீசார் கைது செய்து இருக்கிறார்கள்.
கேரட் ஜூஸ் தெரியும் கேரட் அல்வா கூட தெரியும் கேரட் பீர் பற்றி கேள்விப்பட்டுள்ளீர்களா.? ஊரடங்கு காலத்தில் வடச்சென்னை ஸ்பெஷல் இந்த கேரட் பீர் தான் இதை வீட்டில் தயாரித்த வந்தது அம்பலமானது கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் இருப்பதால் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இன்றுடன் 31 நாட்கள் ஆகி விட்டன.
ஆனால் மறுபக்கம் டாஸ்மாக் கடைகளை உடைப்பது, கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்வது ஜோராக நடந்து வருகிறது 200க்கும் அதிகமான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது இந்த நிலையில் கள்ளச்சாராயம் தயாரித்தவரை கைது செய்து வருகிறது போலிஸ், தயாரிக்கப்படும் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் கேரட் வைத்து தயாரித்துள்ளது போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து குறித்த பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர், அப்போது குமார் என்பவரது வீட்டு வாசலில் இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் நிற்பதைப் பார்த்த போலீசார் அவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர் அவர்கள் ஒருவருக்கு ஒருவர் முரணாக பேசியதால் சந்தேகம் அடைந்த போலீசார் சுகுமாரின் வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது வீட்டில் வைத்து கேரட் மூலமாக கொண்டு வேதிப் பொருட்கள் கலந்து சுகுமார் மது பானம் தயாரித்து 200 ரூபாய்க்கு விற்று வந்தது தெரியவந்தது, தீர்ந்து விட்டதால் அடுத்த கட்ட விற்பனைக்கு சுகுமார் எப்பொழுது கடையை திறப்பார் என்று சுகுமார் வீட்டு வாசலில் காத்திருந்தும் தெரியவந்ததும் சுகுமார் வீட்டிலிருந்த கேரட் மில்க் மற்றும் மூலப்பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் கேரட் பீரை கண்டு பிடித்து விற்பனை செய்த குமாரையும் கைது செய்தனர், கொரோனவை பற்றி பயமே இல்லை என்பதுபோல் விதவிதமாக ரகரகமாக கள்ளசாராயம் தயாரிக்கும் கும்பலுக்கு ஊரடங்கு பற்றி கவலை இல்லாமல் இருப்பதுதான் கொரோனாவை விட மிக ஆபத்தானது