தற்பொழுது உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு ஏராளமான புதிய சீரியல்கள் அறிமுகப்படுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் பிரபல தொலைக்காட்சிகளில் ஒன்று தான் கலர்ஸ் தமிழ் இந்த தொலைக்காட்சியில் இது சொல்ல மறந்த கதை என்ற சீரியல் சமீபத்தில் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வந்தது.
இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது அறிமுகமான சில காலகட்டத்திலேயே இந்த சீரியல் முடிய இருப்பதாக தகவல் வெளிவந்து மிகப்பெரிய அதிர்ச்சனை ஏற்படுத்தியுள்ளது இந்த சீரியல் இணைத்தொடர்ந்து நம்ம மதுரை சிஸ்டர்ஸ் என்ற சீரியல் முடியை இருக்கிறதா தகவல் வெளியாகி உள்ளது. கலர்ஸ் தமிழில் டப்பிங் சீரியல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது.
பிறகு நேரடியாக தமிழ் சீரியல்களை ஒளிபரப்பி வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இது சொல்ல மறந்த கதை சீரியல் அறிமுகமாகி கலர்ஸ் தமிழ் சேனலுக்கு நல்ல பெயரினை பெற்று தந்தது இந்த சீரியலில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிகை ரச்சிதா மகாலட்சுமி சாதனா என்ற கேரக்டரில் நடித்து வந்தார். மேலும் இந்த சீரியலில் கதாநாயகனாக சத்யா சீரியல் புகழ் நடிகர் விஷ்ணு நடித்து வந்தார்.
பரபரப்பாக பல திருப்பங்களுடன் மிகவும் சுவாரசியமாக இந்த சீரியல் ஒளிபரப்பாகி வந்த நிலையில் கடந்த வாரம் திடீரென முடிவுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியானது இது ரசிகர்கள் மட்டுமல்லாமல் அதில் நடித்த நடிகர் அனைவருக்கும் பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அதிருப்தி அடைந்த நடிகை ரட்சிதா மகாலட்சுமி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாதனா கேரக்டர் இவ்வளவு சீக்கிரம் முடியும் என்று எதிர்பார்க்கவில்லை கலர்ஸ் டிவியின் போலியாக ப்ரோமோஷன்களில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் இந்த சீரியலில் கமிட்டாக வேண்டாம் என்று என் நண்பர்கள் சொன்னார்கள்.
அவர்களை திட்டி விட்டு இந்த சீரியலில் கமிட்டானேன் ஆனால் என் முடிவு தவறு என்று கலர்ஸ் டிவி உணர்த்திவிட்டது என வெளிப்படையாக விமர்சித்து உள்ளார். இதனை தொடர்ந்து கலர்ஸ் தமிழின் மற்றொரு சீரியலான நம்ம மதுரை சிஸ்டர் சீரியலும் முடிவுக்கு வந்துவிட்டதாக தகவல் வெளியாகிய ரசிகர்கள் மத்தியில் பெரிது மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது 166 எபிசோடுகள் கடந்து மிகவும் வெற்றிகரமாக ஓடி வந்த இந்த சீரியல் தற்போது திடீரென முடிந்தது ஏன் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.