போலீஸ் அதிகாரியாக நடித்து தமிழ் சினிமாவை மிரள வைத்த கேப்டன் விஜயகாந்தின் 5 திரைப்படங்கள்..!

vijaykanth-01
vijaykanth-01

தமிழ் சினிமாவில் பல்வேறு நடிகர்கள் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து கெத்து காட்டி வருகிறார்கள் அந்த வகையில் ஆரம்பத்தில் இருந்தே போலீஸ் கதாபாத்திரத்தில் நடிப்பதில் அதிக அளவு ஆர்வம் காட்டி வந்த ஒரு நடிகர் என்றால் அது கேப்டன் விஜயகாந்த் தான்.  அந்த வகையில் இவருடைய நடிப்பில் வெளியாகி மாபெரும் ஹிட் கொடுத்த 5 திரைப்படங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க

கேப்டன் பிரபாகரன் திரைப்படம் ஆனது 1993 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமாகும் இந்த திரைப்படத்தினை ஆர்கே செல்வமணி இயக்கியது மட்டுமில்லாமல் சரத்குமார் ரம்யா கிருஷ்ணன் மன்சூர் அலி கான் நம்பியார் போன்ற முக்கிய பிரபலங்கள் நடித்த இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி கண்டது இதில் கேப்டன் விஜயகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார்.

புலன் விசாரணை 1990 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படத்தை இயக்குனர் ஆர் கே செல்வமணி அவர்கள்தான் இயக்கியிருந்தார் இந்த திரைப்படத்தில் ராதாரவி சரத்குமார் ரூபினி போன்ற பிரபலங்கள் நடித்த இந்த திரைப்படத்திலும் ரவுடியாக ஆனந்தராஜ் நடித்திருப்பார். மேலும் இந்த திரைப்படத்தில் விஜயகாந்த் அரசியல்வாதியாக இருக்கும் ராதாரவிக்கு பாடம் கற்று தருவது கதையாகும்.

வாஞ்சிநாதன் இந்த திரைப்படம் 2006ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமாகும் இதிலும் ரம்யாகிருஷ்ணன் பிரகாஷ்ராஜ் போன்ற பல்வேறு பிரபலங்கள் நடித்து இருப்பார்கள் மேலும் இதில் அரசியல்வாதியாக பிரகாஷ்ராஜ் நடித்து இருப்பார். அதேபோல போலீஸ் அதிகாரியாக நடிகர் விஜயகாந்த் நடித்து அசத்தி இருப்பார்.

ஊமை விழிகள் இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படத்தை இயக்குனர் அரவிந்தராஜ் இயக்கியிருந்தார் மேலும் இந்த திரைப்படத்தில் விஜயகாந்த் அவர்கள் ஒரு வயதான தோற்றத்தில் காணப்படுவது மட்டுமில்லாமல் கிராமத்தில் காணாமல் போகும் பெண்களை கண்டுபிடிப்பது விஜயகாந்தின் கதா பாத்திரம் ஆகும்.

சத்ரியன் இந்த திரைப்படம் 1990 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தத் திரைப்படத்தில் ரேவதி பானுப்பிரியா போன்றவர்கள் நடித்திருப்பார்கள் மேலும் இது திரைப்படத்தில் விஜயகாந்தின் மனைவியாக நடித்த ரேவதியை கொன்றுவிடுவார்கள் பின்னர் அவர் போலீஸ் அதிகாரியாக இருந்து எதிரிகளை துவம்சம் செய்வார்.