80, 90 காலகட்டங்களில் கொடி கட்டி பறந்தவர் கேப்டன் விஜயகாந்த். இவர் குறிப்பாக ஆரம்பத்தில் கிராமத்து கதைகள் உள்ள படங்களிலேயே பெரிதும் நடித்து வெற்றிகளை குவித்தார் மேலும் தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார். பின் ரஜினி, கமல் போன்றவர்களுக்கு நடிகர்களுக்கு நிகராக வலம் வந்தார்
தொடர்ந்து சினிமா உலகில் வெற்றிகரமாக ஓடிய இவருக்கு திடீரென அரசியல் ஆசை வந்தது அதன் காரணமாக ஒரு கட்சி ஒன்றை ஆரம்பித்து தொடர்ந்து வெற்றிகளை பெற்று. அதன் காரணமாக கேப்டன் விஜயகாந்தின் கட்சி முன்னேறிக்கொண்டே போனது இடையில் திடீரென கேப்டன் விஜயகாந்துக்கு உடல் நலக்குறைவு ஏற்பட காரணமாக கட்சியில இவர் தொடர்ந்து சீராக பணியாற்ற முடியவில்லை..
இது ரசிகர்களும் சரி, அந்த கட்சியில் இருக்கும் உறுப்பினர்களுக்கும் சற்று வருத்தத்தை கொடுத்துள்ளது ஆனால் அவர் மீண்டு வர வேண்டும் என்பதே பலரின் கோரிக்கை.. இப்படி இருக்கின்ற நிலையில் கேப்டன் விஜயகாந்த் உடல்நிலை சரியில்லை என்றாலும் அவ்வபோது முக்கிய மற்றும் விசேஷ நாட்களில் ரசிகர்கள் மற்றும் தன்னுடைய கட்சி ஆட்களை சந்தித்து கொண்டு தான் இருக்கிறார்.
அந்த வலையில் இன்று 2023 புத்தாண்டை முன்னிட்டு கேப்டன் விஜயகாந்த் தனது தொண்டர்களை சந்திக்க தேதிமுக அலுவலகத்திற்கு வந்தார் அப்பொழுது எடுக்கப்பட்ட கேப்டன் விஜயகாந்தின் புகைப்படங்கள் இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகியது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் நம்ப கேப்டன் இது.? எப்படி இருந்தார்..
இப்படி மாறிட்டாரே என சோகத்துடன் புகைப்படத்தை பார்த்து பகிர்ந்து வருகின்றனர் மேலும் அவர் வெகு விரைவிலேயே நலம் பெற்று மீண்டும் கட்சி பணிகளை நன்றாக செய்ய வேண்டுமென பலரும் பிரார்த்தனையும் செய்து வருகின்றனர் இதோ கேப்டன் விஜயகாந்தின் லேட்டஸ்ட் புகைப்படங்களை நீங்களே பாருங்கள்.