கேப்டன் விஜயகாந்த் காலமானார்..

actor vijayakanth death
actor vijayakanth death

Actor Vijayakanth Death: நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நிலை குறைவால் இன்று காலமானார். கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கி வந்த விஜயகாந்துக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. எனவே மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைத்து அரசியலில் ஈடுபட்டார்.

அப்படி தேமுதிக தலைவராக பதவியேற்ற விஜயகாந்த் ஜெயலலிதா, கலைஞர் இவர்களுக்கு அடுத்த இடத்தை குறுகிய காலத்திலேயே பிடித்தார். விரைவில் விஜயகாந்த் தான் முதல்வர் ஆவார் என மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது இந்த சூழலில் உடல் நலக்குறைவு ஏற்பட்டது அதன் பிறகு தொடர்ந்து அரசியலில் இருந்து வந்தாலும் நாளுக்கு நாள் உடல்நிலை மோசமானதால் விஜயகாந்தின் மகன்களும், மனைவியும் கட்சியை நடத்தி வந்தனர்.

பிரச்சனை மறந்து ஒரு படி கீழே இறங்கி வந்த மகா.. நேரம் பார்த்து சீன் போடும் சூர்யா, ராஜலட்சுமி – ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோட்

சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த் உடல்நலம் தேறி வீட்டிற்கு வந்தார். இந்த நேரத்தில் விஜயகாந்த் மனைவி பதவியேற்றதையும் பார்த்தோம். இந்நிலையில் திடீரென்று மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விஜய்காந்துக்கு மூச்சு திணறல் இருப்பதாக கூறப்பட்டது.

ஒரு கட்டத்தில் கொரோனா தொற்று உறுதியானது. எனவே மருத்துவர்களின் பரிசோதனையில் கேப்டன் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது மூச்சு விடுதலில் சிரமம் இருப்பதாகவும் அதற்கான சிகிச்சை கொடுக்கப்பட்ட வருவதாக தேமுதிக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.

கேப்டனை தாக்கிய கொரோனா.. மருத்துவமனையில் அனுமதி இதோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

இந்நிலையில் தற்பொழுது விஜயகாந்த் இறந்துவிட்டதாக தகவல் தகவல் வெளியாகி உள்ளது. இவ்வாறு பிரபல நடிகரும் தேமுதிக நிறுவன தலைவரான விஜயகாந்த் 71 வயதில் காலமாகியுள்ளார். மியாட் மருத்துவமனையில் இருந்து அவர் உடல் ஆம்புலன்ஸ் மூலம் அவரது இல்லத்திற்க்கு கொண்டு செல்லப்படுகிறது. இவ்வாறு இந்த செய்தி கேட்ட விஜயகாந்தின் ரசிகர்கள், திரைப் பிரபலங்கள் என அனைவரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.