71 வயதில் காலமான விஜயகாந்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? ஏலம் போன பிரம்மாண்ட மாளிகை..

Captain Vijayakanth net worth news
Captain Vijayakanth net worth news

Captain Vijayakanth Net worth: தேமுதிக நிறுவன தலைவரும் பிரபல தமிழ் நடிகருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவினால் சென்னையில் இன்று காலமானார். 71 வயதில் காலமான விஜயகாந்த் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. மூச்சுத் திணறலுக்கு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு கொரோனா தொற்று உறுதியானது இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தற்பொழுது கேப்டன் விஜயகாந்த் உடல் மியாட் மருத்துவமனையில் இருந்து அவரது இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. சில வாரங்களுக்கு முன்பு விஜயகாந்த் உடல்நிலை மோசமடைந்ததால் சென்னையில் உள்ள எம்ஐஓடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 14 நாட்கள் சிகிச்சை பெற்று வந்தார்.

வசதியான குடும்பத்தில் பிறந்து பல கஷ்டங்களை அனுபவித்த விஜயகாந்த்.. துணிச்சலாக செயல்பட்டு மக்கள் மனதை கவர்ந்த கேப்டன்

பிறகு உடல் நலம் தேறி வீட்டிற்கு வந்தார் இந்நிலையில் மீண்டும் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நடிகர் விஜயகாந்த் அரசியலில் வருவதற்கு முன்பு 154 படங்களில் நடித்துள்ளார். சிறந்த தொழிலையும் செய்து வந்த இவர் நீச்சல் குளம் மற்றும் தோட்டத்துடன் கூடிய பிரம்மாண்டமாக சாலிகிராமத்தில் மாளிகை கட்டினார்.

ஆனால் 2023 ஜூலை 7ஆம் தேதி ரூ 4.25 கோடி ஏலம் போனது இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தங்களது கடன் ரூபாய் 5.5 கோடியை வசூலித்தது. ஒரு காலகட்டத்தில் பிரபல நடிகராகவும் அரசியல்வாதியாகவும் கலக்கி வந்த விஜயகாந்தின் குடும்பத்தினர்கள் மாளிகை ஏலம் விடப்பட்டதால் தற்பொழுது காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மதுரை மற்றும் மாமண்டூரில் வசித்து வருகின்றனர் மாமண்டூர் சொத்து மதிப்பு ரூபாய் 4.25 கோடி இருக்குமாம்.

கேப்டன் உடல் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு கொண்டுவரப்பட்டது.. கதறியழும் பிரேமலதா.. குவிந்த தொண்டர்கள்

மேலும் ரியல் எஸ்டேட், திரைப்பட தயாரிப்பு நிறுவனம், உணவகங்கள் மற்றும் தொலைக்காட்சி சேனல்களில் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அவரிடம் ஆடி க்யூ7, டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா, பிஎம்டபுள்யூ எக்ஸ்5, மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் 350, ஃபோர்டு எண்டவர், வோல்வோ s90 மற்றும் ஹூண்டாய் சான்டா போன்ற கார்களும் தனது தொழில் வாழ்க்கையின் முடிவில் ஐந்து முதல் பத்து கோடி வரை திரைப்பட கட்டணத்தை வாங்கினார் எனவும் கூறப்படுகிறது. தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் அவரிடம் 1.6 கிலோவுக்கு மேல் தங்கம் இருப்பதாக குறிப்பிட்டு இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.