Captain Vijayakanth Death: கேப்டன் விஜயகாந்த் கொரோனா தொற்று காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டு நுரையீரல் பாதிக்கப்பட்டதனால் மரணம் அடைந்துள்ளார் இவருடைய மரணம் திரையுலகினர்கள் மட்டும் இன்றி இவருடைய ஏராளமான ரசிகர்களையும் மீளா துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
மியாட் மருத்துவமனையில் இருந்து விஜயகாந்தின் உடல் அவருடைய வீட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 71 வயதில் காலமாகி இருக்கும் பிரபல நடிகரும் தேமுதிக நிறுவன தலைவருமான விஜயகாந்த் தொடர்ந்து பல வருடங்களாக சிகிச்சை பெற்று வருகிறார். அப்படி சில வாரங்களுக்கு முன்பும் தீவிர சிகிச்சை செய்யப்பட்டு நலமுடன் வீடு திரும்பினார்.
இந்த சூழலில் திடீரென உடல்நிலை குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு செல்ல அங்கு விஜய்காந்துக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அதற்காக அறிக்கை வெளியிட்டிருந்தனர். இந்த சூழலில் சில மணி நேரங்கள் இருக்கும் முன்பு சிகிச்சை பலனின்றி காலமானார்.
தற்பொழுது விருகம்பாக்கத்தில் உள்ள அவருடைய வீட்டிற்கு விஜய்காந்தின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. எனவே விஜயகாந்தின் உடலை பார்க்க வந்த ஏராளமான ரசிகர்களும் தொண்டர்களும் கதறி அழுகின்றனர். மேலும் விஜயகாந்த் மனைவி பிரேமலதாவும் கண்ணீர் விட்டு அழுது கொண்டே செல்கிறார்.
அதற்கான புகைப்படங்களும் மேலும் விஜயகாந்த் தூக்கி செல்லும் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு விஜயகாந்தின் இறப்பு அனைவரையும் மீளா துயரத்தில் ஆழ்த்தியுள்ளது ஏராளமான பிரபலங்கள் விஜயகாந்தின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.