80, 90 காலகட்டங்களில் கொடி கட்டி பறந்தவர்கள் ரஜினி மற்றும் கமல் அவர்களுக்கு ஈடு இணையாக மற்றொரு பக்கம் ஓடியவர் என்றால் அது கேப்டன் விஜயகாந்த் தான். இவர் தொடர்ந்து கிராமத்திய கதைகளில் நடித்து தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார். சினிமா உலகில் வெற்றி கண்டு வந்த இவர். மறுபக்கம் தன்னை நம்பி வருவர்களுக்கும் தன் கூட இருப்பவர்களுக்கும் பல உதவிகளை செய்தார்.
மேலும் எப்பொழுதுமே பயப்படாமல் தனக்கு என்ன தோன்றுகிறதோ அதை வெளிப்படையாக பேசும் குணம் கொண்டவராகவும் இருந்ததால் பலருக்கும் பிடித்துப்போனவராக விஜயகாந்த் இருந்தார் இப்படி இருக்கின்ற நிலையில் விஜயகாந்த் பற்றிய செய்தி ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.
விஜயகாந்த் பஞ்ச் டயலாக் மற்றும் ஆக்சன் சீன்களின் மூலமா தான் அதிகப்படியான ரசிகர்களை கவர்ந்து இழுந்தார் இவர் சண்டை காட்சிகள் ஒவ்வொன்றும் செம்ம சூப்பராக ரசிக்கும் படி இருக்கும்.. அப்படி ஒரு படத்தில் ஒரு சண்டைக் காட்சியில் போலி அருவாள் இல்லாததால் உண்மையான அரிவாளை வைத்து காட்சி வைத்து விஜயகாந்த் நடித்து உள்ளார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.
ஒரு படத்தில் தலைவாசல் விஜய் அவர்களின் கையை வெட்டுவது போல ஒரு காட்சி இருந்து வந்துள்ளது அன்று டம்மி வீச்சருவா செய்யப்படாததால் அந்த சாட்டை எடுத்தே ஆக வேண்டும் என்ற சூழ்நிலை இருந்ததால் உண்மையான வீச்சருவாளை வைத்து எடுக்க யோசித்தது படக்குழு. தலைவாசல் விஜயிடம் என் மேல் நம்பிக்கை இருந்தால் இந்த உண்மையான அரிவாளை வைத்து வெட்டவா என விஜயகாந்த் கேட்டாராம்.
இரண்டு நிமிடம் கொடுங்கள் யோசிக்கிறேன் என சொல்லிவிட்டு தனியாக போய் யோசித்தாராம். விஜயகாந்த் தெரியாத்தனமாக தனது நிஜை கையை வெட்டினாலும் அவர் கண்டிப்பாக தன்னை கைவிட மாட்டார் என நம்பி நடிக்க ஒத்துக்கொண்டாராம். ஒரிஜினல் கையை பின்னால் மடக்கி வைத்துவிட்டு வாழைத்தண்டை முன்னாடி காட்டி உள்ளனர் விஜயகாந்த் உண்மையான அரிவாளை அந்த வாழைத்தண்டை சீவினாராம் ஆனால் தெரியாத்தனமாக தலைவாசல் விஜய் கையில் அல்லது உடம்பில் பட்டு இருந்தால் அவ்வளவுதான் ஆனால் துணிந்த அந்த ஷாட்டில் விஜயகாந்த் சரி, தலைவாசல் விஜய்யும் சரி நடித்திருந்தனர்.